கன்னி- 2026 வார ராசிபலன் 12.7.2026 முதல் 18.7.2026 வரை

விலை உயர்ந்த ஆபரணங்களை கவனமாக கையாள வேண்டும்.
Kanni weekly rasipalan
கன்னி வார ராசிபலன்
Published on

கன்னி

சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் வக்ரகதியில் நின்றாலும் ராசிக்கு 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன் குரு சேர்க்கை இருப்பது கன்னி ராசியினருக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்பாகும். வாரத்தின் முற்பகுதியில் சற்று சாதகமான பலன்கள் நடக்கும். பிற்பகுதியில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டியது உங்களது கடமையாகும். அலுவலகத்தில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டப்படும். குடும்பத்தில் எல்லா விசயங்களையும் மனம் விட்டுப் பேசும் படியான சூழல் உருவாகும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தொல்லை கொடுத்த எதிரிகள் விலகுவார். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். திடீர் விரய செலவுகளும் வரலாம் என்பதால் நிதானம் தேவை. அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு புதிய நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடாது. புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். விலை உயர்ந்த ஆபரணங்களை கவனமாக கையாள வேண்டும். புதன் வக்ர நிவர்த்தி அடையும் வரை சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆடி வெள்ளிக்கிழமை லலிதா சகஸ்ரநாமம் படிக்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com