கன்னி- 2026 ஆடி மாத ராசிபலன்

புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வரவேண்டுமென்ற எண்ணம் நிறைவேறும்.
Kanni
கன்னி
Published on

கன்னி

கன்னி ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது. மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் தொழில் ஸ்தானத்தில் தன் சொந்த வீட்டில் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டு. பங்குதாரர்கள் பக்கபலமாக இருப்பர். தங்கு தடைகள் தானாக விலகும். 'சப்தம ஸ்தானத்தில் சனி பகவான் இருக்கிறாரே? என்று நீங்கள் நினைக்க வேண்டாம். உச்ச குருவின் பார்வை அவர் மீது பதிவதால் ஆரோக்கியத் தொல்லை அகலும், அதிர்ஷ்ட வாய்ப்புகள் அரங்கேறும். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினைகள் படிப்படியாக மாறும். மனதில் இருந்த இனம்புரியாத கவலை அகலும், 9-ம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் தந்தை வழி ஆதரவு உண்டு, அவர்களின் வழியே தனவரவும் கிடைக்கும்.

கடக- புதன்

ஆடி 15-ந் தேதி (31.7.2026) அன்று கடக ராசிக்கு புதன் செல்கிறார். அவர் அங்குள்ள சூரியனோடு இணைந்து புத ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். அவரோடு உச்ச குருவும் இணைவதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்விக்காகவும், கலைக்காகவும் எடுத்த முயற்சி கைகூடும். கடல் தாண்டி வரும் தகவல் ஆதாயம் தரும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். அரசு வழியில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கை கூடும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து பொருளாதார நிலை உயர வழிவகுத்துக் கொடுப்பர். ஒரு சிலர் வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டுமென்று விரும்பினால் இந்த நேரத்தில் எடுக்கும் முயற்சி வெற்றிபெறும். உங்கள் ராசிநாதன் புதன் என்பதால், அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். வந்த பாக்கிகளும் வசூலாகும். குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் சூழல் உருவாகும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வரவேண்டுமென்ற எண்ணம் நிறைவேறும்.

மிதுன- செவ்வாய்

ஆடி 16-ந் தேதி (1.8.2026) மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், மிதுனத்திற்கு வரும்போது தொழில் மாற்றம் உருவாகும். 'நடக்கும் தொழிலைக் கொடுத்து விட்டு புதிய தொழில் தொடங்கலாமா? என்று சிந்திப்பீர்கள். உடன்பிறப்புகளுக்கு வேலை கிடைத்து அதன் மூலம் உதிரி வருமானங்கள் கிடைக்கும். கடன்சுமை பாதிக்குமேல் குறையும். இடம், பூமி விற்பனையால் ஏற்பட்ட பிரச்சினை அகலும் வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்ற முயற்சிப்பீர்கள். அங்காரக வழிபாட்டை முறையாக மேற்கொள்வதன் மூலம் இக்காலத்தை இனிய காலமாக மாற்றிக்கொள்ள இயலும்.

கன்னி- கக்ரன்

ஆடி 17-ந் தேதி (2.8.2026) அன்று கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் நீச்சம் பெறுவது நல்ல நல்ல. தனவரவில் தடைகள் ஏற்படும். இளத்தார் மற்றும் இல்லத்தில் உள்ளவர்களின் பகை அதிகரிக்கும். பணத்தேவையை முன்னிட்டு கடன் வாங்கும் சூழல் ஏற்படும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க இயலாது. தந்தை வழி உறவில் நெருக்கம் குறையும். பாகப்பிரிவினை தாமதப்படும். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோரித்து செய்வதன் மூலமே வெற்றி காண இயலும், பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் எடுக்கும் முயற்சிகள் பலள்தரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வருமானப் பெருக்கம் ஏற்படும் உத்தியோகத்தில் உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு முன்னேற்றப் பாதை தெரியும். மாணவ மாணவிகளுக்கு படிப்பில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜூலை: 22, 23, 27, 28, ஆகஸ்டு: 7, 8, 12, 13.

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பச்சை

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com