ரிஷபம்- 2026 வார ராசிபலன் 19.7.2026 முதல் 25.7.2026 வரை

முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அனுகிரகமும் பக்க பலமாக இருக்கும்.
Rishabam
Published on

ரிஷபம்

திட்டமட்டு செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சுக்கிரன் சுகஸ்தானத்தில் கேது உடன் சேர்க்கை பெற்றுள்ளார். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். புதிய சொகுசு வாகனம் மற்றும் சொத்து வாங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும். வேற்று மதத்தவரின் ஒத்துழைப்பு, ஆதரவு கிடைக்கும். முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அனுகிரகமும் பக்க பலமாக இருக்கும். மனதில் உற்சாகமும் தெம்பும் பிறக்கும். இந்த ஜென்மத்தில் வாழ்க்கையில் நடைபெற வேண்டிய அனைத்து பாக்கிய பலன்களும் நடக்கும். குடும்பத்திலும் சமூகத்திலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். உங்கள் செயல்பாடுகள் மூலம் நல்ல பெயர் எடுப்பீர்கள். மறைமுக பிரச்சினைகளால் ஏற்பட்ட மன வருத்தம் குறையும். குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் மீண்டும் நடைபெறும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. போட்டித் தேர்வில், பொதுத் தேர்வில் மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. சமாளிக்க முடியாமல் இருந்த பிரச்சினைகளுக்கு இனி சுலபமாக தீர்வுகாண முடியும். ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com