விருச்சிகம்- 2026 வார ராசிபலன் 19.7.2026 முதல் 25.7.2026 வரை

எதிர்பார்த்த வகைகளில் பணம் வந்து சேரும்.
Viruchigam
Published on

விருச்சிகம்

மன நிறைவும், நிம்மதியும் உண்டாகும். ராசி அதிபதி செவ்வாய் தன் வீட்டை தானே பார்க்கிறார். ஒரு ஜாதக பலனை நிர்ணயிப்பதில் கோட்சார கிரகங்களின் பங்களிப்பு அளப்பரியது. அந்த வகையில் சூரியன், குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்களால் சந்தோஷம் ஏற்படும். எதிர்பார்த்த வகைகளில் பணம் வந்து சேரும். புதிய நிலம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். சேமித்த பணத்திற்கு நகையாகவோ, இடமாகவோ வாங்குவீர்கள். குல கௌரவம் உயரும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற முடியும். பங்காளித் தொல்லைகள் குறையும். அரசியல் பிரபலங்களின் நட்பு, ஆதரவு கிட்டும். தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பண வரவைத் தரும் கிரகங்கள் சில சுபங்களை தந்தாலும் ஆதிபத்திய ரீதியாக சில அசுபங்களையும் வழங்கலாம். ஏதாவது வீண் செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆடி வெள்ளிக்கிழமை சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com