

எடுத்த காரியத்தில் கண்ணும், கருத்துமாய் செயல்படுவீர்கள். ராசி அதிபதி செவ்வாய் தன் வீட்டைத் தானே பார்க்கிறார். அனுபவ அறிவும், தன்னைத்தானே உணரும் சக்தியும் அதிகரிக்கும். குடும்ப உறவுகளிடம் புரிதல் உண்டாகும். பிணக்குகள் தீரும். கஷ்ட காலம் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கப்போகிறது. இதுவரை வேலை கிடைக்காத மகள், மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணம், சுபகாரியம் தொடர்பாக இந்த மாதம் பேசி முடிக்கலாம். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறி மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தடைபட்ட திருமணம் நிச்சயமாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 12.7.2026 அன்று இரவு 7.06 மணி முதல் 14.7.2026 அன்று இரவு 6.49 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நம்பியவர்கள் தக்க சமயத்தில் கை கொடுக்க மாட்டார்கள். உதவி பெற்றவர்களே உங்களுக்கு எதிராக திரும்புவார்கள். உடன் இருப்பவர்களே குழி பறிக்கும் முயற்சியில் இறங்குவார்கள் என்பதால் யாரையும் நம்பக்கூடாது. ஆடி மாத பிறப்பன்று அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடவும்.