

தடைபட்ட முயற்சிகள் துரிதமாகும் வாரம். ராசி அதிபதி குருவுடன் பாக்கியாதிபதி சூரியன் சேர்வது சிவராஜ யோகமாகும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும். வீண் அலைச்சல், துக்கம் விலகும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் தடைகள் வந்தாலும் குருப் பார்வையால் சுமூகமாகும். அதிக முதலீட்டில் சொந்த தொழில் செய்பவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும். நல்ல தசாபுத்தி நடைபெறும் பட்சத்தில் மிக மிக சாதகமான நன்மைகள் நடைபெறும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் அகலும். 14.7.2026 அன்று இரவு 6.49 மணி முதல் 16.7.2026 அன்று இரவு 7.52 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம். நீங்கள் நல்லது சொன்னாலும் மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். பேச்சில் கவனம் தேவை. கோபத்தை கட்டுப்படுத்தவும். ஆடி மாத வெள்ளிக்கிழமையில் குல, இஷ்ட தெய்வத்தை வழிபட அற்புதங்கள் வந்து சேரும்.