தனுசு- வார ராசிபலன் 24.5.2026 முதல் 30.5.2026 வரை

கடனாக கொடுத்து மாட்டிக்கொண்ட பணம் திரும்பக் கிடைக்கும்.
தனுசு வார ராசிபலன்
Published on

தனுசு

திட்டமிடடு செயல்பட வேண்டிய காலம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுகிறார். இதனால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகிறது. இது தனுசு ராசியினரின் வாழ்க்கையில் தடைபட்ட அனைத்து விதமான நல்ல பலன்களும் நடத்தும் அமைப்பாகும்.

புதிய தொழில் முயற்சி ஆர்வம்

உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகு வார்கள். மூத்த சகோதரம், சித்தப்பா, நண்பர்கள் மூலம் ஆதாயங்களும், உதவிகளும் தேடி வரும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவுடன் புதிய தொழில் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். கடனாக கொடுத்து மாட்டிக்கொண்ட பணம் திரும்பக் கிடைக்கும்.

காதல் திருமணம்

சுய பெருமை பேசி உங்கள் வளர்ச்சிக்கு நீங்களே தடையாக இருக்கக்கூடாது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். காதல் திருமண முயற்சிகள் நிறைவேறும். தம்பதிகளிடம் ஏற்பட்ட மன பேதம் சீராகும். வைகாசி விசாகத்தன்று சந்தன அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com