

பராபவ வருடம் ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது. உங்கள் ராசிநாதன் குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். அதோடு ஜென்மச் சனியின் ஆதிக்கமும் நடைபெறுகிறது. எனவே குடும்பச் சுமை கூடும். விரயங்கள் அதிகரிக்கும். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வளர்ச்சியில் குறுக்கீடுகள் அதிகரிக்காமல் இருக்க அவ்வப்போது தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடன்பிறப்புகளின் மூலம் ஒரு நல்ல தகவல் வரலாம். மாதத்தின் பிற்பகுதியில் சுக்ரன் நீச்சம் பெறுவதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ஆடி 15-ந் தேதி (31.2.2026) அன்று கடக ராசிக்கு புதன் செல்கிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். அவரோடு உச்ச குருவும் இணைவதால் நற்பலன்கள் இல்லம் தேடி வரும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். தங்கு தடைகள் தானாக விலகும். உத்தியோக முன்னேற்றம், தொழில் விருத்தி போன்றவற்றால் மகிழ்ச்சி அடைவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். இதுவரை கடுமையாக முயற்சித்தும் நடைபெறாத காரியங்கள் இப்பொ ழுது துரிதமாக நடைபெறும். வி.ஐ.பி.களின் மூலம் விருப்பங்கள் நிறைவேறும் இதுவரை பாகப்பிரிவினைக்கு ஒத்துவராத உடன்பிறப்புகள் இப்பொழுது ஒத்துவருவர். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் நன்மை கிடைக்கும்.
ஆடி 16-ந் தேதி (1.8.2026) அன்று மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்திற்கு வருவது நன் மைதான். தொட்டது துலங்கும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு பிரகாசிக்கும் வாய்ப்பு உண்டு. இடம் வாங்குவது, வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுதுபார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தியும், இதுவரை முடிவடையாத காரியங்கள் இப்பொழுது முடிவடையும். உடன்பிறப்புகளின் இல்லங் களில் நடைபெறும் திருமணத்தை முன்னின்று நடத்தி வைப்பீர்கள். அரசியல்களத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.
ஆடி மாதம் 17-ந் தேதி (2.8.2026) அன்று கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3,8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் நீச்சம் பெறுவது நன்மைதான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப நல்ல பலன்கள் வரப்போகிறது. வருமானம் உயரும். தொழில் வளர்ச்சி உண்டு. பெண்வழிப் பிரச்சினைகள் அகலும். ஆடை ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வாகன யோகம் உண்டு. பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்று வீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் உண்டு. கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ மாணவிகளுக்கு பாராட்டு வந்துசேரும். பெண்களுக்கு குடும்பர் சுமை கூடினாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டு. வருமானம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூலை: 23, 24, 25, 30, 31, ஆகஸ்டு: 5, 6, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.