துலாம்- வார ராசிபலன் 24.5.2026 முதல் 30.5.2026 வரை

வாழ்க்கைக் துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும்.
துலாம்- வார ராசிபலன் 24.5.2026 முதல் 30.5.2026 வரை
Published on

துலாம்

நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய காலம். ராசி அதிபதி சுக்ரன் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உத்தியோகம், தொழில் ரீதியாக வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகிட்டும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்.

உடல் நலம் சீராகும்

மாணவர்கள் எதிர்கால கல்வி குறித்து திட்டமிடுவீர்கள். திருமணத் தடை அகலும். புத்திர பிராப்தம் உண்டு. வாழ்க்கைக் துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும். உடல் நலம் சீராகும். சிலருக்கு வாரிசு இல்லா சொத்து கிடைக்கும்.சொத்துக்கள் மீதான டாக்குமெண்ட் பிரச்சினை தீரும். சட்ட ரீதியான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

பத்தில் குரு பகவான்

பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும் என்பது நிதர்சனமான உண்மை. தற்போது கோச்சார குரு பகவான் பத்தாம் இடத்தில் ஜூன் 2 முதல் உச்சம் பெற போகிறார் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். எனவே தொழில் உத்தியோகத்தில் பதவியில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டியது முக்கியமாகும். யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க கூடாது. வைகாசி விசாகத்தன்று சர்க்கரைப் பொங்கல் படைத்து முருகனை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com