துலாம்- 2026 ஆடி மாத ராசிபலன்

மாமன், மைத்துனர் வழியில் மங்கல ஓசை கேட்பதற்கான வழிபிறக்கும்.
Thulam
துலாம்
Published on

துலாம்

துலாம் ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய திருப்பங்கள் பலவும் காணப்போகிறீர்கள். அருளாளர்களின் ஆதரவு கைகொடுக்கும். பஞ்சம ஸ்தானத்தில் ராகு இருப்பதால் பிள்ளைகள் வழியில் சுபச்செலவு ஏற்படும். உங்கள் ராசிநாதன் மாதத்தின் பிற்பகுதியில் நீச்சம் பெறுவதால் அந்த நேரத்தில் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ, மருத்துவச் செலவு வரலாம் தைரியமும், தன்னம்பிக்கையும் மிக்க உங்களுக்கு, உச்சம் பெற்ற குருவின் பார்வையால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் கிடைக்கும்.

கடக- புதன்

ஆடி 15-ந் தேதி 31.7.2026) அன்று கடக ராசிக்கு புதன் செல்கிறார். அவர் அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். அவரோடு உச்ச குருவும் இணைவதால் எதிர்பார்த்த நல்ல மாற்றங்கள் வந்துசேரும். குறிப்பாக தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். அதற்கு வள்ளல்களின் ஒத்துழைப்பும். வங்கிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 9. 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன் என்பதால், தூரதேச பயணங்கள் அமையும். வெளிநாட்டில் பணிபுரிய வரும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வது பற்றி சிந்திப்பீர்கள். உங்கள் சுய ஜாதகம் பலம்பெற்றிருக்குமானால் உங்கள் எண்ணங்கள் ஈடேறும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் பூர்த்தியாகும். மாமன், மைத்துனர் வழியில் மங்கல ஓசை கேட்பதற்கான வழிபிறக்கும்.

மிதுன- செவ்வாய்

ஆடி 16-ந் தேதி (1.8.2026) மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், இதுவரை அஷ்டமத்தில் சஞ்சரித்து ஆரோக்கியத் தொல்லை, மன வருத்தத்தைக் கொடுத்து வந்தார். இப்பொழுது அவர் 9-ம் இடத்திற்கு வருவதால் சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும். சொந்தங்களின் வாழ்த்துகளைப் பெறுவீர்கள். சிக்கல், சிரமங்கள் அகலும். செய்தொழில் சிறப்பாக அமையும். செல்வநிலை உயரும். திடீர் மாற்றங்கள் வந்து ஏற்றங்களைத் தரும். வீடு வாங்க வேண்டும். இடம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பூர்த்தியாகும். அங்காரக கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நற்பலன்களை வழங்கும்.

கன்னி- சுக்ரன்

ஆடி 17-ந் தேதி (2.8.20026) அன்று கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கும், 8-ம் இடத்திற்கும் அதிபதியான சுக்ரன் நீச்சம் பெறுவதால், ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் திடீரென மாற்றமும், ஏற்றமும் வரும். மங்கலச் செய்திகள் வந்தாலும், அவை நடைபெறுவதில் தாமதம் ஏற் படும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகும். உங்கள் ராசிநாதன் நீச்சம் பெறும் இந்த நேரத்தில் புது முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. குல தெய்வப் பிரார்த்தனைகள் நன்மை தரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும் பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் விழிப்புணர்ச்சி தேவை.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜூலை: 17, 18, 23, 24, ஆகஸ்டு: 1, 2, 9, 10, 14, 15.

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்சு.

X

Maalai Malar
www.maalaimalar.com