சிம்மம்- வார ராசிபலன் 24.5.2026 முதல் 30.5.2026 வரை

தாய் மாமன் மற்றும் தாய் வழி உறவுகளால் அனுகூலம் கிடைக்கும்.
சிம்மம் வார ராசிபலன்
Published on

சிம்மம்

அஷ்டம சனியின் தாக்கம் குறையும் காலம். விரய ஸ்தானத்தில் உச்சம் பெறும் குருவின் ஒன்பதாம் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் உள்ள சனிபகவான் மேல் பதிகிறது. அஷ்டம சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைய துவங்கும். கோட்சார குருபகவான் தைரியம், தன்னம்பிக் கையை அதிகரிப்பார்.

ராஜயோகம்

தாய் மாமன் மற்றும் தாய் வழி உறவுகளால் அனுகூலம் கிடைக்கும். தான தர்மம் செய்து மிக நல்ல புண்ணியங்களை சேர்ப்பீர்கள். தசா புத்திகள் சாதகமாக இருந்தால் ராஜயோகத்திற்கும் இடமுண்டு. ஆரோக்கியத்தில் தெளிவு உண்டு. வங்கி இருப்புகள் அதிகரிக்கும். பணம், நகை, விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்திருக்கவும்.

கடன்

பணத்தை யாருக்கும் கடனாக தரவும், வாங்கவும் வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட்டு கடனாக பெற்றுத்தரும் பணம் திரும்ப வர வாய்ப்பு இல்லை. கடுமையாக உழைக்க நேரும். முக்கிய பணிகள் தேங்கும். தொழில் நிமித்தமான அலைச்சலான பயணங்கள் அதிகரிக்கும். வைகாசி விசாகத்தன்று விபூதி அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com