சிம்மம்- 2026 ஆடி மாத ராசிபலன்

பாகப்பிரிவினைக்கு பலமுறை முயற்சித்தும் முடிவடையாத சூழல் இப்போது மாறும்.
Simmam
சிம்மம்
Published on

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் விரயாதிபதி சந்திரன் வீற்றிருக்கிறார். விரய ஸ்தானத்தில் ராசிநாதன் சூரியனோடு, குருவும் இணைந்திருக்கிறார். அஷ்ட மத்துச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. எனவே வரவைக் காட்டிலும் செலவு கூடுதலாக இருக்கும். வருமானப் பற்றாக்குறை ஏற்படும். இரவு, பகலாக பாடுபட்டும் அதற்குரிய பலன் கிடைப்பது அரிது. எதிலும் தடை தாமதம் வரும் என்றாலும், தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டு போராடி வெற்றி பெறுவீர்கள்.

கடக- புதன்

ஆடி மாதம் 15-ந் தேதி (31.7.2026) அன்று கடக ராசிக்கு புதன் செல்கிறார். அவர் அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். அவரோடு உச்ச குருவும் இணைந்திருப்பதால் இல்லத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். ஒரு காரியத்தை தொடங்கும் முன், பணத்தை வைத்துக் கொண்டு தொடங்க வேண்டியதில்லை. காரியத்தை தொடங்கிவிட்டால் பணம் தானாகவே வந்துசேரும். சேமிப்பில் சிறிது கரையலாம். பூமி வாங்குவது, விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது, தெய்வத்திற்காக செலவிடுவது, சகோதர சகோதரிகளின் கல்யாணத்தை முன்னின்று நடத்தி வைப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

மிதுன- செவ்வாய்

ஆடி 16-ந் தேதி (1.8.2006) மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். 4, 9ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், லாப ஸ்தானத்திற்கு வரும்போது பொருளாதாரப் பற்றாக்குறை அகலும் புனிதப் பயணம் அதிகரிக்கும். அருளாளர்களின் தொடர்பால் சில நல்ல காரியங்கள் நடைபெறும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். திறமை மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர், சொத்துக்கள் வாங்குவது. விற்பது சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன்தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். தொழிலுக்கான மூலதனம் கிடைக்கும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினைக்கு பலமுறை முயற்சித்தும் முடிவடையாத சூழல் இப்போது மாறும்.

கன்னி-சுக்ரன்

ஆடி 17-ந் தேதி (2.8.2026) அன்று கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் நீச்சம் பெறுவது நல்ல நல்ல. சகாய ஸ்தானாதிபதியாகவும், தொழில் ஸ்தாணதிபதியாகவும் விளங்கும் சுக்ரன் நீச்சம் பெறுவதால், தொழில் வளர்ச்சியில் குறுக்கீடு அதிகரிக்கும். எதிரிகளின் பலம் மேலோங்கும். நினைத்த நேரத்தில் நினைத்ததை செய்ய இயலாது. சுற்றத்தார்களும், நண்பர்களும் உங்கள் மீது குறை கூறுவர். வெற்றிக்குரிய தகவல் வரவேண்டுமானால் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழி பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு தொழிலை விரிவு செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கலைஞர்களுக்கு தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்துசேரும். மாணவ மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை ஏற்படும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்

ஜூலை: 19, 20, 24, 25, 26, ஆகஸ்டு: 5, 6, 10, 11, 16, 17.

மகிழ்ச்சி தரும் வண்ணம் சிவப்பு.

X

Maalai Malar
www.maalaimalar.com