என் மலர்
சிம்மம்
2025 ஆடி மாத ராசிபலன்
சிம்ம ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். எனவே விரயங்கள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஏற்றமும், இறக்கமும் கலந்த வாழ்க்கை அமையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் எண்ணற்ற தடைகள் வந்துசேரும். கொடுக்கல்-வாங்கல்களில் ஏமாற்றங்களும் ஏற்படலாம். எதிலும் மிகுந்த கவனம் தேவைப்படும் நேரம் இது.
மிதுன - சுக்ரன்
ஆடி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். தொழில் ஸ்தானாதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்திற்கு வரும்போது, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்த வண்ணமாக இருக்கும். புதிய கிளைத் தொழில் தொடங்கும் சூழ்நிலை கூட ஒருசிலருக்கு ஏற்படும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காணும் விதத்தில் சுக்ரனின் சஞ்சாரம் அமைகிறது. வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களில், விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு வெளியில் வந்து சுயதொழில் தொடங்க நினைத்தவர்களுக்கு அதுவும் கைகூடும். வருமானம் பெருகும் நேரம் இது.
கன்னி - செவ்வாய்
ஆடி 13-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 2-ம் இடத்திற்கு வரும் பொழுது இனிய பலன்கள் ஏராளமாக நடைபெறும். குறிப்பாக இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சிகள் யாவிலும் வெற்றி கிடைக்கும். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் சாதித்து காட்டுவீர்கள். தொழில் வளம் மேலோங்கும். சொத்துக்களால் லாபம் உண்டு. என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது நல்ல விலைக்கு விற்று லாபம் காண்பீர்கள்.
கடக - புதன்
ஆடி 18-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். நினைத்தது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருக்கலாம். வளர்ச்சிப் பாதையில் குறுக்கீடுகள் ஏற்படக்கூடும். வருமானம் ஒரு வழியில் வந்தாலும் திடீர் செலவுகளால் உள்ளம் தடுமாறும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கலாம். கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது, பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசை பொருட்களை வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் காட்டலாம். உத்தியோகத்தில் திடீர் இடமாற்றம் வந்துசேரும். உங்களுக்கு இடையூறு செய்த மேலதிகாரிகள் மாற்றப்படுவர்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தடைகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் தொந்தரவு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. கலைஞர்களுக்கு அதிகப் பிரயாசையின் பெயரில் ஒப்பந்தங்கள் அமையும். மாணவ - மாணவிகளுக்கு எடுக்கும் முயற்சியில் குறுக்கீடுகள் ஏற்படலாம். பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் ஏற்படும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூலை: 18, 19, 23, 24, 29, 30, ஆகஸ்டு: 3, 4, 5, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை






