மிதுனம்- 2026 வார ராசிபலன் 12.7.2026 முதல் 18.7.2026 வரை

புதிய வீடு, மனை வாங்குவீர்கள்.
Mithunam weekly rasipalan
மிதுனம் வார ராசிபலன்
Published on

மிதுனம்

காரிய அனுகூலம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதபகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். தனஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் குரு சேர்க்கையால் சிவராஜ யோகம் ஏற்படுகிறது. சுறுசுறுப்பும் செயல்திறனும் கூடும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். இதனால் நல்ல வாய்ப்புகள் கை கூடி வரப்போகிறது. எதிர்பார்த்ததைவிட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எந்த பிரச்சினைகளையும் சமாளிக்கும் தைரியம் அதிகரிக்கும். கடந்தகால உழைப்பிற்கான பலன் இப்பொழுது கை கொடுக்கும். மகிழ்ச்சியான சம்பவங்கள் அதிகம் நடைபெறும். இதுவரை பட்ட சங்கடங்கள் முடிவிற்கு வரும். பணவரத்து திருப்தி தரும். நிதி நெருக்கடிகள் நீங்கும். சுபச்செலவுகள் அதிகமாகும். புதிய வீடு, மனை வாங்குவீர்கள். வரா கடன் என்று முடிவு செய்த பணம் உங்களைத் தேடி வரும். பிள்ளைகளால் பெற்றோருக்குப் பெருமை உண்டாகும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். உயர் கல்விக்கு விரும்பிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடி மாதப்பிறப்பு அன்று ஸ்ரீ மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com