மகரம்- 2026 வார ராசிபலன் 12.7.2026 முதல் 18.7.2026 வரை

அடிக்கடி அலைச்சலான பயணங்கள் செய்வீர்கள்.
Magaram weekly rasipalan
Published on

மகரம்

நல்ல செய்தி தேடி வரும் வாரம். ராசிக்கு குரு பார்வை உள்ளதால் புத்திக் கூர்மை கூடும். புதிய சிந்தனைகள் உருவாகும். மனச்சுமை குறையும்.குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டா கும். பிள்ளைகளின் திருமணம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா, உயர் கல்வி என சுப மங்களச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். கவுரவப் பதவிகள், அரசாங்கப் பதவிகள் கிடைக்கும். புகழ்,அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும். தன்னம்பிக்கை யால் காரியம் சாதிப்பீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை கவனமுடன் நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி அலைச்சலான பயணங்கள் செய்வீர்கள். 16.7.2026 அன்று இரவு 7.52 மணி முதல் 18.7.2026 அன்று இரவு 11.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களை ஒத்தி வைப்பது நல்லது. எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். ஆடி மாத வெள்ளிக்கிழமையன்று லலிதா திரிசதி நாமாவளி படிக்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com