மகரம்- 2026 ஆடி மாத ராசிபலன்

புதிய வாகனம் வாங்கிப் பயணிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்.
Magaram
மகரம்
Published on

மகரம்

மகர ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது. மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஆனால் வக்ரம் பெற்றிருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை ஏற்படலாம். அசவுகரியமான சூழ்நிலையும், எதையும் திட்டமிட்டுச் செய்ய முடியாத நிலைமையும் ஏற்படும். குருவின் பார்வை இருப்பதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடும். என்றாலும் அதுவரை கவலைகள் ஆட்கொள்ளும். தொழிலில் போட்டி அதிகரிக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. அஷ்டமத்தில் கேது இருப்பதால் இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படலாம். சனி வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் சந்தோஷ வாய்ப்புகளை அதிகம் சந்திக்கலாம்.

கடக- புதன்

ஆடி 15- தேதி (31.7.2026) அன்று கடக ராசிக்கு புதன் செல்கிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். அவரோடு உச்ச குருவும் இணைவதால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாற்றமோ, பதவி உயர்வோ கிடைக்கலாம். தந்தை வழி உறவில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக தீரும். வாகன மாற்றம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறும். புதிய வாகனம் வாங்கிப் பயணிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். எதையும் கலந்து ஆலோசித்து செய்தால் நல்ல பலன்களைப் பெற இயலும். குறிப்பாக புதன் சப்தம ஸ்தானத்தில் இருப்பதால் கல்யாண முயற்சி கைகூடலாம். கடல் தாண்டிச் சென்று பணிபுரிய வேண்டுமென்று விரும்புகிறவர்களுக்கு. நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும்.

மிதுன - செவ்வாய்

ஆடி 16-ந் தேதி (1.8.2026) மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4. 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் ஜீவன ஸ்தானத்திற்கு வரும்போது உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகள் அதிலுள்ள நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பர். 'வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லையே, கொடுத்த கடனை வாங்க முடியவில் லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங்கள் அகலும், நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைத்து, தொழிலை விரிவு செய்துகொள்வீர்கள், வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் சுபகாரியங்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள். அங்காரக வழிபாடு மேலும் நன்மைகளை வழங்கும்.

கன்னி - சுக்ரன்

ஆடி 17-ந் தேதி (2.8.2026) அன்று கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் நீச்சம் பெறுவது அவ் வளவு நல்லதல்ல. குறிப்பாக பிள்னைகளால் சில பிரச்சினைகள் வந்துசேரும். அவர்கள் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. மருத்துவச் செலவுகள் மனக்கலக்கத்தை உருவாக்கும். அனுபவஸ்தர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும்.பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நினைத்தது நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் உறுதியாகும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் வந்துசேரும். மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு குடும்பச் சுமை கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜூலை: 19, 20, 23, 24, ஆகஸ்டு: 1, 2, 5, 6, 16, 17.

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்சு.

X

Maalai Malar
www.maalaimalar.com