கடகம்- வார ராசிபலன் 24.5.2026 முதல் 30.5.2026 வரை

தன வரவு தாராளமாக ஏற்படும். குடும்ப உறவுகளிடம் அன்பு அதிகரிக்கும்.
கடகம் வார ராசிபலன்
Published on: 

கடகம்

மனதில் உற்சாகமும் தெம்பும் பிறக்கும் வாரம். ஜூன் 2 முதல் ராசியில் குரு பகவான் உச்சம் அடைவதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பாக்கியஸ்தானம் ராசி பலம் பெற போகிறது.இந்த ஜென்மத்தில் வாழ்க்கையில் நடைபெற வேண்டிய அனைத்து பாக்கிய பலன்களும் நடக்கும்.திருமணம் புத்திர பாக்கியம் போன்றவற்றில் நிலவிய தடை தாமதங்கள் அகலும்.

உத்தியோகம்

நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். எதிரிகள் பிரச்சினை முடிவிற்கு வரும்.வேலை இழந்தவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படும்.

குல தெய்வம்

தன வரவு தாராளமாக ஏற்படும். குடும்ப உறவுகளிடம் அன்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அனுகிரகமும் பக்க பலமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள். வைகாசி விசாகத்தன்று இளநீர் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com