

நினைத்தது நிறைவேறும் வாரம். ராசியில் சூரியன் குரு சேர்க்கை உள்ளது. பாலிசி முதிர்வு தொகை, பூர்வீகச்சொத்து, பங்கு சந்தை முதலீடு என எதிர்பாராத பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். லாட்டரி, பந்தயம், சூதாட்டம், புத்தி சார்ந்த, கற்ற கலை சார்ந்த வருமானம் உண்டு. சிலருக்கு பிள்ளைகள் மூலம் உபரி வருமானம் கிடைக்கும். பங்குச் சந்தை ஆதாயம் இரட்டிப்பாகும். கடந்தகால நெருக்கடிகள் பிரச்சனைகள் குறையத் துவங்கும். எதிலும் வெற்றியே காண்பீர்கள். உங்கள் வாக்கிற்கு மதிப்பும், மரியாதையும் உண்டாகும். அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கு லாபம் கிடைக்கும். வேலை இன்மையால் அவதிப்பட்டவர்களுக்கு அரசு, தனியார் துறையில் நல்ல வேலை கிடைக்கும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவிற்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நோய் தொல்லை குறையும். ஆடி வெள்ளிக்கிழமை புனித நீர் நிலைகளில் நீராட உள்ளமும் உடலும் புத்துணர்வடையும்.