என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கடகம்
2024 ஆவணி மாத ராசிபலன்
தன்னம்பிக்கையால் தடைகளை அகற்றும் கடக ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே விரயாதிபதி புதன் சஞ்சரிக்கிறார். மேலும் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கமும் இருக்கிறது. எனவே விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்.
வீடு மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. புதியவர்களை நம்பி செய்த காரியங்களில் இழப்புகளை சந்திக்க நேரிடும். சனிக்கிழமை தோறும் சனி பகவான் வழிபாடு நன்மையை வழங்கும்.
சனி - சூரியன் பார்வை
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அவரை பார்க்கிறார். உங்கள் ராசிக்கு தனாதிபதியான சூரியனும், அஷ்டமாதிபதியான சனியும் ஒன்றையொன்று பார்த்துக் கொள்வதால், தனவரவு தாராளமாக வந்தாலும் விரயங்கள் இருமடங்காக இருக்கும்.
குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். அஷ்டமத்தில் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால், அதன் கடுமை கொஞ்சம் குறையலாம். உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உருவாகும். இக்காலத்தில் இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படும்.
சுக்ரன் நீச்சம்
ஆவணி 10-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். பொருளாதாரப் பற்றாக் குறையை சரி செய்ய புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர் களுக்கு திடீர் திருப்பங்கள் வந்துசேரும். உத்தியோக ரீதியாக வெளிநாடு சென்று பணிபுரிய நினைப்பவர்களுக்கு, அதில் இருந்த தடை அகலும்.
தாயின் உடல்நலம் சீராகும். வாங்கிய சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் அகல, முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்து இணையலாம். புகழ்மிக்க ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என்ற ஆசை நிறைவேறும்.
மிதுன - செவ்வாய்
ஆவணி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் போது, சொத்து விற்பனையும், அதனால் தன லாபமும் கிடைக்கலாம். 'கட்டிய வீட்டை விற்று விட்டோமே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு.
ஒரு சிலர் பழைய தொழிலை கைமாற்றி விட்டு, புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கை கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். வாடகைக் கட்டிடத்தில் குடியிருப்பவர்கள், சொந்தக் கட்டிடம் வாங்கிக் குடியேறும் வாய்ப்பு உருவாகும்.
சிம்ம - புதன்
ஆவணி மாதம் 15-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது, நல்ல நேரம்தான். கொடுக்கல்- வாங்கல் சீராகும். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் சேரும் வாய்ப்பு உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவர்.
கூட்டுத் தொழில் புரிவோர், தனித்து இயங்கும் முயற்சி கைகூடும். பழைய வாகனங்கள் பழுதாவதை முன்னிட்டு, புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்பீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் இருந்து நல்ல தகவல் வரலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
உத்தியோகத்தில் உள்ளவர்கள், அதிகாரிகள் பாராட்டும்படி நடந்துகொள்வர். கலைஞர்கள், தங்கள் பணியில் வரும் சவால்களை சமாளிக்க நேரிடும். மாணவ - மாணவிகளுக்கு எதிர்கால கல்வி சம்பந்தமாக முக்கிய முடிவெடுக்கும் சூழ்நிலை உருவாகும். தம்பதியர்களுக்குள் ஒற்றுமை மேலோங்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 22, 23, 26, 27, செப்டம்பர்: 2, 3, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்