கும்பம்- 2026 வார ராசிபலன் 12.7.2026 முதல் 18.7.2026 வரை

உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும்.
Kumbam weekly rasipalan
Published on

கும்பம்

இன்னல்கள் முடிவுக்கு வரும் வாரம். தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சனிக்கு குருவின் பார்வை உள்ளது. குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமையும், உயர்வும் ஏற்படும். தாய்வழி உறவுகளின் உதவி கிடைக்கும். விருந்தினர் வருகையால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு, அவர்களின் திறமைக்கு வேலை கிடைக்கும். உங்களின் முயற்சியால் தொழிலில் உத்தியோகத்தில் சாதகமான பலன் உண்டாகும். கடன் தொல்லை அகலும். விற்பனையாகாமல் கிடந்த சொத்துக்கள் தற்போது விற்று முழுத் தொகையும் கைக்கு வந்து சேரும். புதிய தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும்.கையில் பணம் புரள்வதால் கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி புதிய தொழிலில் இறங்க வேண்டாம். சுய ஜாதக தசா புக்தி சாதகம் அறிந்து சுய தொழில் துவங்க வேண்டும். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com