search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாவிஷ்ணு"

    • ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும்.
    • ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும்.

    மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார்.

    ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள்.

    ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் இருப்பதே ஏகாதசி விரதம்.

    உடலாலும், உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.

    ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி) இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை.

    ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும்.

    ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும்.

    பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது.

    குளிர்ந்த வயிறை சுத்தமாக்குகிறது. இந்நாளில் துளசி இலை பறிக்கக் கூடாது.

    தேவையானதை முதல் நாளே பறித்து வைத்து விட வேண்டும்.

    வைகுண்ட ஏகாதசிக்கு மறு நாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும்.

    • சிவபெருமான் பார்வதியை அடைய வழிபட்ட துளசியே!
    • எல்லாத் தேவர்களும், தேவ மாதர்களும், கின்னரர்களும் வணங்கிய துளசியே!

    மாயோனுக்கு மகிழ்ச்சி கொடுப்பவளும், பாற்கடலைக் கடைந்தபோது தோன்றியவளும், பகவானால் திரு முடியில் ஏற்றுக் கொள்பவளும், திருமாலின் சர்வாக்க சம்பந்தம் பெற்றவளுமான துளசியே, உன் இலைகளால் பூஜிப்பவர்களுக்கு அருள் செய்வாயாக!

    பகவானின் பூஜைப் பொருட்களுள் மிக முக்கியமானவளும், பகவானின் திரு வடிகளை அடைய இடையூறான பாவங்களைப் போக்குபவளும்,

    உலக நன்மைக்காகவும், கோமதி ஆற்றில் கிருஷ்ணனால் வளர்க்கப்பட்டவளும், கோகுல வளர்ச்சிக்காகவும், கோபியர்களின் நலத்திற்காகவும், கம்சனுடய அழிவிற் காகவும் கண்ணனால் பூஜிக் கப்பட்ட துளசியே!

    வசிஷ்டரின் ஆணைப்படி ராமருக்கு முன்னால் சரயூ நதிக்கரையில் அரக்கர்களின் அழிவுக்காகவும், முனிவர்களின் தவ விருத்திக்காகவும், நடப்பெற்ற துளசியே!

    ராமனின் பிரிவால் அசோக வனத்தில் துயருற்ற சீதா பிராட்டியார், அறம் வளர்த்த நாயகனை அடைவதற்காக வணங்கிய துளசியே!

    சிவபெருமான் பார்வதியை அடைய வழிபட்ட துளசியே!

    எல்லாத் தேவர்களும், தேவ மாதர்களும், கின்னரர்களும் வணங்கிய துளசியே!

    தண்ட காரண்யத்தில் உலக நன்மையின் பொருட்டு ராமர், சீதை, லக்குமணன் ஆகியோர் வழிபட்ட துளசியே அறன்மிக ஆரண்யத்திலும் கயையிலும், பித்ருக்கள் வணங்கிய துளசியே!

    மூவுலகிலும் பெருமை பெற்ற கங்கையைப் போன்ற துளசியே, சுக்ரீவன் வாலியின் அழிவிற்கு ரிஷ்ய முக பர்வதத்தில் தொழப்பட்ட துளசியே!

    கடலைக்கடந்து சீதையைக் காண அனுமனுக்கு உதவிய துளசியே!

    தேவர்களுக்குத் தலைவியே மாலுக்கு பிரியமானவளே! உன்னைச் சரண் புகுந்து வழிபடுகின்றேன். எனக்கு அருள் புரிவாயாக.

    இந்த துளசியின் ஸ்தோத் திரத்தை துவாதசி திதியில் கூறினால் 32 ஆபிசாரங்களும் விலகும். இளமை, முதுமை ஆகிய பருவங்களில் செய்த பாவங்கள் அகலும் இதில் சந் தேகமே இல்லை.

    துளசியும், நாராயணனும் மகிழ்ச்சி அடைந்து செல்வத்தைத் தருவார்கள். பகைவர் அழிவர். நற்சுகமும், நற் கல்வியும் அடைவர். முக்தியும் கிடைக்கும்.

    • மீண்டும் வலம்வந்து கற்கண்டு தாம்பூலம் நிவேதனம் செய்து மீண்டும் 3 முறை நமஸ்கரிக்கவும்.
    • அவ்வாறு செய்தால் கன்னிப்பெண்களுக்கு திருமணம் விரைவில் கைகூடும் என்பது நம்பிக்கை.

    வெள்ளிக்கிழமை காலை துளசி செடிக்கு சந்தனம் குங்குமம் வைத்து பூசாரி மும்முறை வலம் வந்து இந்த மந்திரத்தை 12 முறை படித்து

    மீண்டும் வலம்வந்து கற்கண்டு தாம்பூலம் நிவேதனம் செய்து மீண்டும் 3 முறை நமஸ்கரிக்கவும்.

    அவ்வாறு செய்தால் கன்னிப்பெண்களுக்கு திருமணம் விரைவில் கைகூடும் என்பது நம்பிக்கை.

    துளசி ஸ்தோத்திர மந்திரமாக பிருந்தா, பிருந்தாஸனி, விச்வ பூஜிதா, விஸ்வபாவினீ, புஷ்பஸாரா, நந்தனீச, துளசி கிருஷ்ண ஜீவனீ ஏகத் நாமாஷ்டகம் சைவ ஸ்தோத்திரம் நாமார்த்த சம்யுதம் ய: படேத் தாம்சே சம்பூஜ்ய ஹோச்வமேத பலம் லபேத் என்று ஜபிக்க வேண்டும்.

    துளசி தீர்த்தம் 400 க்கும் மேற்பட்ட நோய்களை தீர்க்கும் ஆற்றல் கொண்டது.

    துளசி தீர்த்தம் 400 க்கும் மேற்பட்ட நோய்களை தீர்க்கும் ஆற்றல் கொண்டது. துளசியில் உடனடி பலன் பெறும் சில நோய்கள் விவரம் வருமாறு:

    1. உண்ட விஷத்தை முறிக்க

    2. விஷஜுரம் குணமாக

    3. ஜன்னிவாத ஜுரம் குணமாக

    4. வயிற்றுப்போக்குடன் ரத்தம் போவது நிற்க

    5. காது குத்து வலி குணமாக

    6. காது வலி குணமாக

    7. தலைசுற்று குணமாக

    8. பிரசவ வலி குறைய

    9. அம்மை அதிகரிக்காதிருக்க

    10. மூத்திரத் துவார வலி குணமாக

    11. வண்டு கடி குணமாக

    12. வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக

    13. எந்த வியாதியும் உண்டாகாமலிருக்க

    14. தோல் சம்பந்தமான நோய் குணமாக

    15. மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற

    16. அஜீரணம் குணமாக

    17. கெட்ட ரத்தம் சுத்தமாக

    18. குஷ்ட நோய் குணமாக

    19. குளிர்காய்ச்சல் குணமாக

    20. மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக

    21. விஷப்பூச்சியின் விஷம் நீங்க

    22. பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க

    23. காக்காய்வலிப்புக் குணமாக

    24. ஜலதோஷம் குணமாக

    25. ஜீரண சக்தி உண்டாக

    26. தாதுவைக் கட்ட

    27. சொப்பன ஸ்கலிதம் குணமாக

    28. இடிதாங்கியாகப் பயன்பட

    29. தேள்கொட்டு குணமாக

    30. சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக

    31. கண்ணில் விழுந்த மண், தூசியை வெளியேற்ற

    32. வாதரோகம் குணமாக

    33. காய்ச்சலின் போது தாகம் தணிய

    34. பித்தம் குணமாக

    35. குழந்தைகள் வாந்தியை நிறுத்த

    36. குழந்தைகள் வயிற்றுப்போக்கை நிறுத்த

    37. சகல விதமான வாய்வுகளும் குணமாக

    38. மாலைக்கண் குணமாக

    39. எலிக்கடி விஷம் நீங்க

    40. காய்ச்சல் வரும் அறிகுறி தோன்றினால்

    41. ரணத்தில் ரத்தம் ஒழுகினால் நிறுத்த

    42. வாந்தியை நிறுத்த

    43. தனுர்வாதம் குணமாக

    44. வாதவீக்கம் குணமாக

    45. மலேரியாக் காய்ச்சல் குணமாக

    46. வாய்வுப் பிடிப்பு குணமாக

    47. இருமல் குணமாக

    48. இன்புளூயன்சா காய்ச்சல் குணமாக

    49. காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த

    50. இளைப்பு குணமாக

    51. பற்று, படர்தாமரை குணமாக

    52. சிரங்கு குணமாக

    53. கோழை, கபக்கட்டு நீங்க

    • துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
    • மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கற்கள் படிப்படியாக கரையும்.

    துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

    மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கற்கள் படிப்படியாக கரையும்.

    இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷ நீர் கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.

    பெண்களுக்கு உதவும் துளசி

    துளசி இலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக் கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறிய பின் பத்திரப் படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் 1 தேக் கரண்டி எடுத்து அருந்தி வரவேண்டும்.

    இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தி வந் தால் பெண்க ளுக்கு உண் டாகும் பெரும் பாடு (ரத்தப் போக்கு) குணமாகும்.

    • துளசியை தீர்த்தமாகவும், பூஜை பொருட்களாக மட்டுமின்றி உணவாகவும் சாப்பிடலாம்.
    • இந்த சாதம் மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவாகும்.

    துளசியை தீர்த்தமாகவும், பூஜை பொருட்களாக மட்டுமின்றி உணவாகவும் சாப்பிடலாம்.

    துளசி சாதம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

    துளசி இலை&1/2 கப்

    சாதம்&1 கப்

    கடலை பருப்பு&1 ஸ்பூன்

    உளுத்தம் பருப்பு&1 ஸ்பூன்

    கடுகு சிறிதளவு

    கறிவேப்பிலை சிறிதளவு

    எண்ணெய்&1 ஸ்பூன்

    கொத்தமல்லி தழை சிறிதளவு

    பச்சை மிளகாய்&2

    வெங்காயம்&1

    செய்முறை...

    துளசி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு போட்டு வதக்கவும்.

    பின்னர் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு சிறிது வதங்கியதும் துளசி இலை, தேவையான அளவு உப்பு போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

    பின்னர் சாதத்தை போட்டு சிறிது நேரம் கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும். இந்த சாதம் மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவாகும்.

    • இதனால் சயரோக இருமலும் கூட குறைந்து விடுகிறது. ரத்த ஓட்டம் சீராகும்.
    • இதயமும் பலம் பெறும். சிறுநீரில் உள்ள சர்க்கரையும் குறைந்து விடுகிறது.

    காலத்தின் மாற்றத்திற்கேற்ப நாம் உட்கொள்ளும் விஷத்தன்மை கொண்ட உணவுப்பழக்க வழக்கத்தால் தற்போது கல்லீரல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகிறது.

    கல்லீரலில் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஒவ்வாமையை அடிப்படையாக கொண்டு தண்ணீர் உணவுகள் எது சாப்பிட்டாலும் வாந்தி வரும்.

    ஏனெனில் இவர்களுக்கு கல்லீரல் வேலை செய்யவில்லை என்றால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

    கல்லீரல் பாதிப்பை போக்க நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் சதகுப்பை 100 கிராம், சோம்பு 100 கிராம் வாங்கி இரண்டையும் தனித் தனியே லேசாக வறுத்து, இடித்து சூரணம் செய்து சலித்து எடுக்கவும்.

    ஒரு கிலோ பனை வெல்லத்தை சலித்த சூரணத்தில் போட்டு இடித்தால் அல்வா மாதிரி வரும்.

    இதை புட்டியில் அடைத்து வைத்துக் கொண்டு, நாள் ஒன்றுக்கு 3 வேளைகள் (காலை 6, மதி யம் 12, மாலை 6 மணிக்கு) நெல்லிக்காய் அளவு எடுத்துச் சுவைத்து சாப்பிடவும், இப்படி ஒரு மாதம் சாப்பிட்டால், கல் லீரல் குணமாகி, வாந்தி வருவது நின்றுவிடும்.

    கல்லீரலை வலுவூட்டி சீராக செயல்பட வைப்பது மாதுளங்கனியும், துளசி இலைகளும் தான்.

    அவற்றைக் கொஞ்சம் எடுத்து கழுவி, அத்துடன் ஏலக்காய் 4, சுக்கு அரை துண்டு சேர்த்து நசுக்கி 1 குவளை நீரில் கலந்து காய்ச்சி, அரை குவளையாக வடிகட்டி தேவையானால் சிறிது பால், தேன் கலந்து பருகி வர உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    துளசி கசாயம், துளசி சிரப், ஆஸ்த்துமா, இளைப்பு நோய், மூளைக்காய்ச்சல், மலேரியா, நிமோனியா காய்ச் சல், கல்லீரல் சிதைவு ஆகிய நோய்களை வராமலும், வளர விடாமலும் தடுக்கும் ஆற்றல் உண்டு.

    மதுபானம், போதை மருந்து, சிகரெட் புகையால் பாதிக்கப்பட்ட கல் லீரல் மெல்ல, மெல்ல சிதை வடையும்.

    முற்றிய நிலையில் ரத்த வாந்தி எடுத்து அறுவை சிகிச்சைக்கு ஆட்பட வேண்டிய நிலை ஏற்படும்.

    இதற்கு எலுமிச்சம்பழமும் தேனும், தக்காளி ரசமும் சம அளவு கலந்து காலை, மாலை நேரங்களில் வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர கல்லீரலின் சீர்கேடுகள் மறைந்து, உடம்பு தெம்பாக இருக்கும்.

    இதனால் சயரோக இருமலும் கூட குறைந்து விடுகிறது. ரத்த ஓட்டம் சீராகும்.

    இதயமும் பலம் பெறும். சிறுநீரில் உள்ள சர்க்கரையும் குறைந்து விடுகிறது.

    ஈரல் பலப்பட வேண்டுமென்றாலும், கல்லீரலில் ஏதேனும் கோளாறு இருந்தாலும் பாலில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, உடனே சாப்பிட்டு வாருங்கள். சீக்கிரத்தில் குணமாகும்,

    • கண்ணுக்குத் தெரியாத சிறு, சிறு பூச்சிக்கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும்.
    • துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச்சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.

    கண்ணுக்குத் தெரியாத சிறு, சிறு பூச்சிக்கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும்.

    அல்லது வேறு வகைகளில் பாதிப்பு ஏற்படும்.

    இந்த பூச்சிகளின் விஷத்தன்மை நீங்க துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச்சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.

    பச்சரிசியுடன், துளசி இலை சம அளவு எடுத்து நன்கு அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.

    கல்லீரல் மண்ணீரலில் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், துளசியை இரவில் ஊற வைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள்.

    தொடர்ந்து சாப்பிட்டால் ஈரல் கோளாறுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

    • இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.
    • இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.

    ரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி இலை, முற்றிய முருங்கை இலை சம அளவு எடுத்து இடித்து 50 மி.லி அளவு சாற்றில் 2 சிட்டிகை சீரகப் பொடி சேர்த்து காலை, மாலை என இரு வேளை உட்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.

    இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.

    துளசி இலை 9 எண்ணிக்கை

    கடுக்காய் தோல் 5 கிராம்

    கீழாநெல்லி 10 கிராம்

    ஓமம் 5 கிராம்

    மிளகு 3

    இந்த ஐந்தையும் ஒன்றாக எடுத்து மைபோல் அரைத்து மோரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவந்தால், சாம்பல், மண் தின்னும் குழந்தைகள் எளிதில் அவற்றை ஒதுக்கும்.

    துளசியில் 9 வகைகள் இருக்கின்றன.

    துளசியில் 9 வகைகள் இருக்கின்றன. 

    அவை:

    1. கரியமால் துளசி,

    2. கருந் துளசி,

    3. கற்பூர துளசி,

    4. செந் துளசி,

    5. காட்டுத்துளசி,

    6. சிவ துளசி,

    7. நீலத்துளசி,

    8. பெருந்துளசி,

    9. நாய்த் துளசி.

    • ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துளசி பறிக்கக்கூடாது.
    • சதுர்த்தசி, அஷ்டமி, பவுர்ணமி, ஏகாதசி திதிகளில் படிப்பதை தவிர்க்க வேண்டும்.

    துளசியின் இலைகள் மட்டுமின்றி விதை, தண்டு, வேர் முதலான எல்லாமே பூஜைக்கு உரியவை தான்.

    ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துளசி பறிக்கக்கூடாது.

    சதுர்த்தசி, அஷ்டமி, பவுர்ணமி, ஏகாதசி திதிகளில் படிப்பதை தவிர்க்க வேண்டும்.

    கூடுதல் உடல் எடையை குறைக்க...

    துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட் கொண்டால் உடல் எடை குறையும்.

    குப்பை மேனி இலையயும், துளசி இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த சூரணத்தை தினமும் இருவேளை, வேளைக்கு இரண்டு சிட்டிகை என எடுத்து நெய்யில் குழைத்து தொடர்ந்து உட்கொண்டால் மூலச்சூட்டினால் ஏற்படும் கருப்பு நிறம் மாறும்.

    தீபத்தொளியே திருவே துளசியம்மா

    பாபத்தைத் தீர்க்கும் பரிவே துளசியம்மா

    கோவிந்தன் உட்பொருளாய்க் கூடி கலந்த அம்மா

    மாவிந்தை உன்றன் மகிமைச் சிறப்புமம்மா

    செவ்வாய் திருவெள்ளி செல்வி தழைக்க வந்தாய்

    உய்வாக என்னாளும் உரிமையில் நீ இருப்பாய்

    கைவாய் கனிவதென்ன கருத்தொன்றிப்போன அம்மா

    கண்ணன் மனதுவைத்தால் கனிந்துருக வாராயோ

    நாபிக் கமலமம்மா நல்லவனின் தேகமம்மா

    நான்முகனும் தஞ்சமென நாடியங்கு வீற்றிருப்பான்

    கோபி கமலனிகள் கூட்டுதனை விரும்புகின்ற

    கோவிந்தன் கொண்டாடும் கொள்கை துளசியம்மா

    நாடி விளக்கு வைத்தோம் நறுநெய்யும் ஊற்றி வைத்தோம்

    நாயகியே பாருமம்மா நலமே துளசியம்மா

    பாடித் துதிக்கின்றோம் பரதேசம் போகாதே

    பார்த்து அருள் புரிக பண்பே துளசியம்மா

    நல்ல துளசி வைத்தோம் நறும்பூசை

    செய்து வைத்தோம்

    நல்ல துளசியெனும் வனிதையை

    நான் பாடி வைத்தேன்

    எல்லாத் திரவியமும்

    இனிதாம் தாய் நீயல்லவோ?

    எங்கள் துளசியம்மா

    ஏற்றம் தந்தால் ஆகாதோ?

    கோலம் புனைந்தோமே

    குங்குமமும் இட்டோமோ

    மாலின் பெருமை கொள்ளும்

    திருமன் புனைந்தோமே

    ஆலும் விழித்தாயாரே

    ஆன்ற துளசியம்மா

    அனைத்தும் உணர்ந்திருந்தும்

    அருகிருந்து காரோயா

    காப்பாய் துளசியம்மா

    கண்ணருள் நீ தந்தருள்க

    தீர்ப்பாய் வருவதற்கே

    திருவிளக்கைத் தேடி வந்தாய்

    பூப்பாய் நீ உண்மையெனப்

    பொய்மை கடிபவளே

    பூத்ததொரு தாமரை நீ

    போற்றி செயும் தீபமடி

    என்று ரிஷிகேசர்

    இங்கிதமாய்க் கேட்டதற்குத்

    தக்க பதிலளித்தாள்

    தளிராம் துளசியம்மா

    நன்றே துளசியம்மா

    நாரணனின் தேவியடி

    கன்றாகக் கதறுகின்றோம்

    கருதுக நீ துளசியம்மா!

    ×