search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில் போலி பாஸ் மூலம் மண் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்-டிரைவர் கைது
    X

    சிவகிரியில் போலி பாஸ் மூலம் மண் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்-டிரைவர் கைது

    • பொது மக்களும், விவசாயிகளும் மணல் அள்ளும் டிராக் டர்களை சிறைபிடிக்கப் போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • டிராக்டரை சோதனையிட்டபோது போலி பாஸ் வைத்து மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    சிவகிரி:

    சிவகிரி கண்மாய் பகுதியில் போலியான பாஸ் வைத்து ஒவ்வொரு செங்கல் சூளைகளுக்கும் 100 டிராக்டர் மண் லோடு கொடுப்பதாகவும், அரசு நிர்ணயித்த அளவை விட அதிகளவில் மண் அள்ளப்படுவதாகவும் தொடர்ந்து புகார் வந்தது. இதனை கண்டித்து பொது மக்களும், விவசாயிகளும் மணல் அள்ளும் டிராக் டர்களை சிறைபிடிக்கப் போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் புளியங்குடி டி.எஸ்.பி. அசோக் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நவமணி தலைமையில் போலீசார் விஜயரங்கப்பேரி, சின்ன ஆவுடைப்பேரி, பெரிய ஆவுடைப்பேரி கண்மாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சின்ன ஆவுடைப்பேரி கண்மாய் பகுதியில் இருந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பி.எஸ்.கே. மாலையாபுரம் பகுதியை சேர்ந்த முத்துகணேசன் சூர்யா (வயது25) என்பவர் மண் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்ட போது போலி பாஸ் வைத்து மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து டிராக்டரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இது தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் நவமணி வழக்குப்பதிவு செய்து டிரைவரை கைது செய்தார். இதுகுறித்து சப்- இன்ஸ் பெக்டர் ஆறுமுகச்சாமி விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×