search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    வீட்டில் ஹோமம் நடத்த முடியவில்லையா? அப்போ பஞ்சகவ்ய விளக்கு ஏற்றலாம்...
    X

    வீட்டில் ஹோமம் நடத்த முடியவில்லையா? அப்போ பஞ்சகவ்ய விளக்கு ஏற்றலாம்...

    • பலபேருக்கு இந்த பொருள் தெரிந்திருக்கலாம்.
    • இந்த விளக்கு ஏற்றுவது லட்சுமிநாராயண பூஜை செய்ததற்கு சமமானது

    பசும்பாலில் சந்திரனும், பசுந்தயிரில் வாயு பகவானும், கோமியத்தில் வருண பகவானும், பசுஞ்சாணத்தில் அக்னி தேவனும், பசு நெய்யில் சூரியபகவானும் வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் இந்துக்களின் பல்வேறு சடங்குகளிலும், பூஜைகளிலும், ஆலயங்களிலும் இதற்கென தனித்துவமான இடம் இருக்கிறது.

    பசுவிலிருந்து பெறப்படும் இந்த ஐந்து மூலப் பொருட்களும் ஒன்று கலக்கும் பொழுது அது தெய்வீக தன்மையை அடைகின்றது. அவ்வைந்து பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

    ஒன்று : பசுஞ்சாணம்

    இரண்டு : பசுவின் கோமியம்

    மூன்று : பசும்பால்

    நான்கு : பசுந்தயிர்

    ஐந்து : பசுநெய்

    பலர் தங்களது வீட்டில் வருடத்திற்கு ஒரு முறையாவது கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் என்று சிறிய ஹோமங்களை புரோகிதர்களை அழைத்து செய்து கொள்வார்கள். ஆனால் இதற்கான பணச்செலவும் வேலைப்பளுவும் சற்று அதிகம் தான். காலத்தின் மாற்றத்தால் இப்போதெல்லாம், வீடு கட்டும்போது முதன்முறையாக யாகம் நடத்தியதோடு சரி.

    வீட்டில் ஹோமம் நடத்தும் சூழ்நிலையானது தற்சமயம் இல்லை. என்ன செய்வது? அதற்கு ஈடு இணையாக வேறொரு பரிகாரத்தை தான் கட்டாயம் நாம் செய்ய வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம். ஹோமங்களின் பலன்களையும், புண்ணியங்களையும் தரக்கக்கூடிய ஒரு விளக்கு பஞ்சகவ்ய விளக்கு. பலபேருக்கு இந்த பொருள் தெரிந்திருக்கலாம். இந்த விளக்கைப் பற்றியம் அதன் பலன்கள் பற்றியும் ஒரு சிலர் அறிந்திருப்பார்கள்.

    இந்தப் பஞ்சகவ்ய விளக்கானது பால், தயிர், நெய், கோமியம், சாணம், இவைகளால் மட்டும் செய்யப்பட்டது.

    வாரம்தோறும் வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை போன்ற தினங்களில் வீட்டை துடைத்து சுத்தப்படுத்திவிட்டு, வீட்டில் ஏதாவது ஒரு பகுதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அங்கு சிறிது பன்னீர் தெளித்து, நன்றாக துடைத்துவிட்டு, அரிசிமாவில் கோலம் போட்டு, காவி தீட்டி, ஒரு தாம்பூலத்தின் மேல் பஞ்சகவ்ய விளக்கை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றி இறைவனை வணங்க வேண்டும்.

    இவ்வாறு தீபம் ஏற்றுவதால் ஒரு ஹோமம் செய்வதால் எவ்வளவு பலன்கள் கிடைக்குமோ அவ்வளவு பலனும் இந்த ஒரு விளக்கினை ஏற்றுவதில் கிடைத்துவிடும். பஞ்சகவ்ய விளக்கு ஏற்றி பூஜை செய்த பின் அந்த விளக்கின் சாம்பலை நெற்றியில் வைத்துக்கொள்ளலாம். மீதம் உள்ள சாம்பலை செடியில் சேர்ப்பதன் மூலம் செடிக்கு உரமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த விளக்கு ஏற்றுவது லட்சுமிநாராயண பூஜை செய்ததற்கு சமமானது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது...

    இந்த விளக்கு ஏற்றுவதால் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை தீரும். செல்வம் பெருகும்.

    Next Story
    ×