search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    53 அடி உயர வெண்கலத்திலான அடைக்கல அன்னை சிலை
    X
    53 அடி உயர வெண்கலத்திலான அடைக்கல அன்னை சிலை

    53 அடி உயர வெண்கலத்திலான அடைக்கல அன்னை சிலை

    சுவாமிமலையை சேர்ந்த சிற்பி ஒருவர் 10 ஆண்டுகளாக தீவிர முயற்சி செய்து 53 அடி உயர வெண்கல அடைக்கல அன்னை சிலையை வடிவமைத்து உள்ளார்.
    தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் உள்ள ஒரு சிற்பக்கூடத்தில் பல்வேறு தலைவர்களின் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் உள்ள அருள் நிறை அடைக்கல அன்னை திருத்தலத்துக்கு 53 அடி உயரத்தில் வெண்கலத்திலான அடைக்கல அன்னை சிலை அமைத்து தர வேண்டும் என கடந்த 2011-ம் ஆண்டு திருத்தல நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து அன்று முதல் கடந்த 10 ஆண்டுகளாக அடைக்கல அன்னை திருத்தலத்தில் வைத்து அடைக்கல அன்னையின் 53 அடி உயரம் கொண்ட முழு உருவ வெண்கல சிலை அமைக்கும் பணியில் சிற்பி ஈடுபட்டு வந்தார்.

    சுவாமிமலையில் உள்ள தனது சிற்ப கூடத்தில் இருந்து சிலைக்கான வார்ப்புகளை தயார் செய்து ஏலாக்குறிச்சி அருள்நிறை அடைக்கல அன்னை திருத்தலத்திற்கு கொண்டு சென்றார். அங்குள்ள ஜெபமாலை பூங்காவில் 53 அடி முழு உருவ அடைக்கல அன்னையின் சிலையை கடந்த 10 ஆண்டுகளாக சிற்பி வடிவமைத்து உள்ளார்.

    பித்தளை, வெண்கலம், ஐம்பொன் உள்ளிட்ட உலோக பொருட்கள் கலந்து செய்து நிறைவாக 53 அடி உயர அடைக்கல அன்னையின் முழு உருவ வெண்கல சிலை 19 டன் எடையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சிலை வைப்பதற்கு பூமியில் இருந்து 18 அடி உயரத்தில் கான்கிரீட் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அதன்மேல் 53 அடி உயரம் கொண்ட அடைக்கல அன்னையின் முழு உருவ சிலை வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சிலையை வடிவமைக்க ரூ.1 கோடியே 60 லட்சம் செலவானதாக கூறப்படுகிறது. இந்த சிலையை மின்னல் தாக்காமல் இருக்க இடி தாங்கியும் அமைக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×