என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
லிங்குசாமியின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு
- செக் மோசடி வழக்கில் தண்டனையை எதிர்த்து இயக்குனர் லிங்குசாமி செய்த மேல்முறையீடு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
- லிங்குசாமிக்கு நிபந்தனையுடன் விதித்த 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திரைப்பட இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள திருப்பதி பிரதர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், கடந்த 2014-ம் ஆண்டு பி.வி.பி. கேப்பிடல் நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் வாங்கியது. அந்த தொகைக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.1 கோடியே 35 லட்சத்தை காசோலையாக அவர்கள் திருப்பி வழங்கினர்.
அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என்று திரும்பி வந்தது. அதையடுத்து லிங்குசாமி, அவரது சகோதரர் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம், கீழ்கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது காசோலை தொகையில் ஏற்கனவே 20 சதவீதத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ளதாகவும், மேலும் 20 சதவீதத்தை டெபாசிட் செய்ய தயாராகவுள்ளதாகவும் லிங்குசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, 20 சதவீதத்தை 6 வாரங்களில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் லிங்குசாமிக்கு விதித்த 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.