search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    வெற்றி அடைந்த படங்களை தான் வச்சி செய்ய முடியும் - தமிழ்ப்படம் 2 சிவா
    X

    வெற்றி அடைந்த படங்களை தான் வச்சி செய்ய முடியும் - தமிழ்ப்படம் 2 சிவா

    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் தமிழ்ப்படம் 2 நாளை வெளியாக இருக்கும் நிலையில், வெற்றி அடைந்த படங்களை தான் எடுத்து ஸ்பூப் பண்ண முடியும் என்று நடிகர் சிவா கூறினார். #Tamizhpadam2 #TP2 #Shiva
    போஸ்டர்கள் மூலமாகவே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது தமிழ்படம் 2. அதன் கதாநாயகன் சிவாவிடம் பேசினோம்.

    ஸ்பூப் பண்ணுவது எளிது அல்ல. எளிது என்றால் இந்நேரம் தமிழ்படம் பாணியில் 10 படங்களாவது வந்து இருக்கும். ஒரு படம் கூட வரவில்லையே? புதிதாக ஒரு கதையை உருவாக்குவது கூட எளிது. ஆனால் ஏற்கெனவே இருக்கும் காட்சிகளை வைத்து கதை எழுதுவது சிரமம். படம் தொடங்குவதற்கு 6 மாதங்கள் முன்பே தயாரிப்பாளர் சசிகாந்த் என்னை அழைத்து 2வது பாகம் உருவாக இருப்பதை கூறினார். கதை தயாரான பின் நான் பார்ட்டி, கலகலப்பு 2 படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால் தாமதம் ஆனது.

    உங்கள் கேரியரில் அடிக்கடி இடைவெளி விழுகிறதே?

    குவார்ட்டர் கட்டிங் தோல்விக்கு பிறகு நடிக்கவே வேண்டாம் என்று நினைத்தேன். ரேடியோவில் வேலை பார்க்கும்போது சுந்தர்.சி அழைத்ததால் கலகலப்பில் நடித்தேன். இடையில் படம் இயக்கும் எண்ணத்தில் கதைகள் எழுத தொடங்கினேன். சென்னை 28 பார்ட் 2, கலகலப்பு 2, பார்ட்டி, தமிழ்படம் 2 என்று போகிறது. நாம் ஒரு திட்டம் வைத்து இருந்தால், கடவுள் ஒரு திட்டம் வைத்து இருக்கிறார். பார்ப்போம்.



    தமிழ் சினிமாவில் உங்களுக்கு என்று ஒரு இடம் இல்லையே?

    நான் திரையில் தோன்றினால் சிரிப்பு வரும் என்று மக்கள் நம்புகிறார்கள். மக்களை திருப்திபடுத்தினால் போதும் என்று நினைக்கிறேன். இருக்கை நிரந்தரம் இல்லை என்று நினைப்பவர்கள் தான் இடம் பிடிக்க முயற்சிப்பார்கள். ஆனால் மக்கள் மனதில் இடம் இருக்கும்போது ஏன் மற்ற இடத்தை பற்றி கவலைப்பட வேண்டும்?

    யாரையும் கலாய்க்கவோ, கிண்டலடிக்கவோ இல்லை. வெற்றி அடைந்த படங்களை தான் எடுத்து ஸ்பூப் பண்ண முடியும். அப்போது தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இது ஒரு வகை சினிமா. இது யாரையும் புண்படுத்த செய்யவில்லை. ரசிக்க மட்டும்தான். ஏற்கனவே வந்த காட்சிகள் இப்படி இருந்தால் எப்படி இருந்து இருக்கும்? என்பதே ஸ்பூப். எனக்கு தெரிந்து யாரும் புண்பட்டதாக தெரியவில்லை. அப்படி புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    விடியற்காலை 5 மணி காட்சி அளவுக்கு வளர்ந்துவிட்டீர்கள். அகில உலக சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டீர்களா?

    அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? 5 மணிக்கு காட்சி திறக்க காரணம் மக்களிடம் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு தான். இதை நான் மனதில் ஏற்றிக்கொண்டால் அடுத்த படத்துக்கு இது நடக்கவில்லையே என்று ஏமாற்றம் ஆவேன். நாம் எதையும் எதிர்பார்க்காமல் செய்தால் போதும். தானாக சில வி‌ஷயங்கள் நடக்கும்.



    சீரியஸ் வேடங்களில் நடிக்க விருப்பம் இல்லையா?

    காமெடி என்பதே சீரியசான வி‌ஷயம் தான். சீரியசான வேடங்களில் நடிப்பதைவிட காமெடி வேடம் தான் சிரமம்.

    கதைகள் தயாராகி இயக்கலாம் என்று முடிவெடுத்தால், யாராவது வந்து நடிக்க அழைத்து விடுகிறார்கள். நல்ல படம் கொடுக்க வேண்டும். எனவே காத்திருக்கிறேன்.

    எந்த திட்டமும் இல்லை. இனிமேல் தேர்ந்தெடுத்து தான் நடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன் என்றார். #Tamizhpadam2 #TP2 #Shiva

    Next Story
    ×