என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இது புதுசு
இந்தியாவில் அறிமுகமான விர்டுஸ் புதிய வேரியண்ட் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
- புதிய போக்ஸ்வேகன் விர்டுஸ் வேரியண்ட் ஏழு நிறங்களில் கிடைக்கிறது.
- இந்த கார் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட EVO TSI பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.
போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது விர்டுஸ் செடான் மாடலின் புதிய GT DSG வேரியண்டை அறிமுகம் செய்தது. புதிய விர்டுஸ் மாடலின் துவக்க விலை ரூ. 16 லட்சத்து 19 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து விர்டுஸ் மாடல் தற்போது கம்பர்ட்லைன், ஹைலைன், டாப்லைன், ஜிடி மற்றும் ஜிடி பிளஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புதிய விர்டுஸ் GT DSG வேரியண்ட் டாப்லைன் AT மற்றும் GT பிளஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட EVO TSI பெட்ரோல் என்ஜின் மற்றும் ஆக்டிவ் சிலிண்டர் கட்-ஆஃப் தொழில்நுட்பம், 7 ஸ்பீடு DSG டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் 148 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் லிட்டருக்கு 19.62 கிலோமீட்டர்கள் வரையிலான மைலேஜ் வழங்கும் என்று ARAI சான்று பெற்று இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய போக்ஸ்வேகன் விர்டுஸ் GT DSG மாடல்: வைல்டு செர்ரி ரெட், சர்குமா எல்லோ, கார்பன் ஸ்டீல் கிரே, ரைசிங் புளூ, கேன்டி வைட், லாவா புளூ மற்றும் ரிப்லெக்ஸ் சில்வர் என்று ஏழு நிறங்களில் கிடைக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை புதிய விர்டுஸ் GT DSG வேரியண்டில் 10-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன.
புதிய வேரியண்ட் அதன் முந்தைய வேரியண்ட்களை விட வித்தியாசப்படுத்திக் கொள்ள முன்புற கிரில், ஃபென்டர் மற்றும் டெயில்கேட் உள்ளிட்டவைகளில் GT பேட்ஜ் கொண்டிருக்கின்றன. இத்துடன் GT அனுபவம் வழங்கும் வகையில் ரெட் பிரேக் கேலிப்பர்கள், GT-தீம் இருக்கை மேற்கவர்கள், குரோம் விங்ஸ், ரெட் ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் கிளாஸ் பிளாக் ஸ்பாயிலர் வழங்கப்பட்டு இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்