search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ரூ. 21 லட்சம் விலையில் இசுசு பிக்கப் டிரக் அறிமுகம்
    X

    ரூ. 21 லட்சம் விலையில் இசுசு பிக்கப் டிரக் அறிமுகம்

    • டார்க் கிரே அக்சென்ட் செய்யப்பட்டுள்ளது.
    • நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் உள்ளது.

    இசுசு நிறுவனம் தனது டி மேக்ஸ் வி கிராஸ் மாடலை இந்திய சந்தையில் அப்டேட் செய்தது. புதிய மேம்பட்ட மாடலில் கூடுதலாக பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2024 இசுசு டி மேக்ஸ் வி கிராஸ் மாடலின் விலை ரூ. 21 லட்சத்து 20 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 26 லட்சத்து 92 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய இசுசு டி மேக்ஸ் வி கிராஸ் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளன. விரைவில் இதன் வினியோகம் துவங்கும். மேம்பட்ட டி மேக்ஸ் வி கிராஸ் மாடலின் வெளிப்புற பம்ப்பர், பாக் லேம்ப் கிளஸ்டர், கிரில், ORVMகள் மற்றும் ரூப் ரெயில் உள்ளிட்டவைகளில் டார்க் கிரே அக்சென்ட் செய்யப்பட்டுள்ளது.


    இந்த மாடலின் 18 இன்ச் அலாய் வீல்கள் பிளாக்டு-அவுட் செய்யப்பட்டுள்ளன. உள்புறம் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. எனினும், பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் டிராக்ஷன் கண்ட்ரோல், இ.எஸ்.சி., ஹில் அசிஸ்ட், ஹில் டிசெண்ட் மற்றும் 3-பாயின்ட் சீட் பெல்ட்கள், சீட் பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்டவை அடங்கும்.

    பவர்டிரெயினை பொருத்தவரை 2023 இசுசு டி மேக்ஸ் வி கிராஸ் மாடலில் 1.9 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 163 ஹெச்.பி. பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த பிக்கப் டிரக் 4x2 மற்றும் 4x4 என இருவித வெர்ஷன்களிலும் கிடைக்கிறது.

    Next Story
    ×