அறிந்து கொள்ளுங்கள்
null

இன்னும் கடைக்கே வரல, 2 லட்சம் ஹெட்செட்கள் காலி.. விற்பனையில் அசத்தும் ஆப்பிள்

Published On 2024-01-31 12:53 GMT   |   Update On 2024-01-31 13:15 GMT
  • இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 2.9 லட்சம் ஆகும்.
  • விற்பனை பிப்ரவரி 2-ம் தேதி துவங்குகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் அதிக விலை கொண்டிருக்கும் போதிலும், விற்பனையில் அசத்தி வருகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 2.9 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலை வாங்க பத்தே நாட்களில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஹெட்செட் விற்பனை அமெரிக்காவில் பிப்ரவரி 2-ம் தேதி துவங்க இருக்கிறது. முன்னதாக இந்த ஹெட்செட் கடந்த ஆண்டு நடைபெற்ற 2023 சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள் விஷன் ப்ரோ இந்தியா உள்பட மற்ற நாடுகளில் எப்போது விற்பனைக்கு வரும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

 


ஜனவரி 29-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் 2 லட்சத்திற்கும் அதிக விஷன் ப்ரோ ஹெட்செட்களை விற்பனை செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஹெட்செட்டிற்கான முன்பதிவு ஜனவரி 19-ம் தேதி துவங்கியது.

முன்னதாக சர்வதேச வல்லுனரான மிங் சி கியோ வெளியிட்ட தகவல்களில், ஜனவரி 19 முதல் ஜனவரி 21-ம் தேதிக்குள் மட்டும் 1 லட்சத்து 60 ஆயிரத்தில் இருந்து 1 லட்சத்து 80 ஆயிரம் விஷன் ப்ரோ யூனிட்களை விற்பனை செய்திருக்கலாம் என்று தெரிவித்து இருந்தார். மேலும் 5 லட்சம் யூனிட்கள் வரை வினியோகம் செய்வதிலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு சவாலாக இருக்காது என்று அவர் தெரிவித்து இருந்தார்.

Tags:    

Similar News