புதிய கேஜெட்டுகள்

பட்ஜெட் பிரிவில் Z சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ஐகூ - லீக் ஆன புது தகவல்

Published On 2024-05-03 12:14 GMT   |   Update On 2024-05-03 12:14 GMT
  • இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
  • தோற்றத்தில் சீன வேரியண்டை போன்றே காட்சியளிக்கும்.

ஐகூ நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் தனது Z9x 5ஜி ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஐகூ இந்தியா வலைதளத்தில் இடம்பெற்று இருப்பதை தொடர்ந்து இதன் இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

புதிய ஐகூ Z9x 5ஜி மாடல் விவோ T3x 5ஜி ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று தெரிகிறது. இதன் டிசைன் மற்றும் தோற்றம் அதன் சீன வேரியண்டை போன்றே காட்சியளிக்கும்.


 

சீன சந்தையில் கிடைக்கும் ஐகூ Z9x 5ஜி மாடலில் 6.72 இன்ச் 120Hz LCD ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒரிஜின் ஒ.எஸ். 4 வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, ஏ.ஐ. சென்சார், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்குகிறது.

முன்னதாக இதேபோன்ற அம்சங்கள் கொண்ட விவோ T3x 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 499 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. 

Tags:    

Similar News