புதிய கேஜெட்டுகள்

கோப்புப்படம் 

6.9 இன்ச் ஸ்கிரீனுடன் உருவாகும் ஐபோன் 16 சீரிஸ் மாடல் - லீக் ஆன புது தகவல்

Published On 2024-05-17 09:20 GMT   |   Update On 2024-05-17 09:20 GMT
  • ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
  • ஐபோன் 16 சீரிஸ் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் டம்மி யூனிட் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் உடன் வைக்கப்பட்டு இருக்கும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் டம்மி யூனிட் அளவில் பெரியதாக காட்சியளிக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், புதிய ஐபோன் 16 சீரிஸ் பற்றிய விவரங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வருகிறது.

அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் டம்மி யூனிட் புகைப்படம் மூலம் புதிய போன் மாடலின் விவரங்கள் ஓரளவுக்கு தெரியவந்துள்ளது. புதிய ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் இதுவரை வெளியான ஐபோன்களில் மிகவும் பெரியதாக இருக்கும் என்று தெரிகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

 


ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் டம்மி யூனிட் புகைப்படத்தின் படி, இந்த மாடலில் 6.9 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய ஐபோன் சீரிசில் பெசல்களை கணிசமான அளவுக்கு குறைக்க ஆப்பிள் நிறுவனம் பார்டர் ரிடக்ஷன் ஸ்டிரக்ச்சர் (பி.ஆர்.எஸ்.) எனும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

இந்த தொழில்நுட்பம் ஐபோன்களின் பெசல்களை முடிந்தவரை மெல்லியதாக மாற்றும். புதிய பி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் அளவீடுகளில் எவ்வித மாற்றமும் இன்றி பெசல்களை குறைக்க உதவும் என்று தெரிகிறது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் கேமரா சென்சார் தற்போதைய ஐபோனில் இருப்பதை விட அளவில் சற்று உயரமாக காட்சியளிக்கிறது.

அந்த வகையில் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலில் 1/1.14 இன்ச் அளவு கொண்ட சென்சார் வழங்கப்படும் என்று தெரிகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 1/1.28 இன்ச் சென்சாரை விட பெரியதாக இருக்கும். 

Tags:    

Similar News