புதிய கேஜெட்டுகள்

ஐபேட் முதல் மேக்புக் ஏர் வரை.. சாதனங்களை சத்தமின்றி அப்டேட் செய்யும் ஆப்பிள்?

Published On 2024-03-04 10:42 GMT   |   Update On 2024-03-04 10:42 GMT
  • இதில் புதிய ஆப்பிள் பென்சில்கள் மற்றும் மேஜிக் கீபோர்டு உள்ளிட்டவை அடங்கும்.
  • இந்த சாதனங்கள் சர்வதேச சந்தையில் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்.

ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி புதிய சாதனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய சாதனங்கள் செய்தி குறிப்பின் வாயிலாகவே அறிவிக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

இம்முறை புதிய மேக்புக் ஏர் மாடல்களுடன் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களின் புதிய நிற ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் புதிய ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர் மற்றும் மேக்புக் ஏர் மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த சாதனங்கள் வரும் வாரத்திலேயே அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

 


பிரபல ஆப்பிள் வல்லுநரான மார்க் குர்மேன் வெளியிட்டுள்ள தகவல்களில் வரும் வாரங்களில் ஆப்பிள் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இதில் புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள், மேம்பட்ட ஐபேட் ஏர், 12.9 இன்ச் மாடல், புதிய ஆப்பிள் பென்சில்கள் மற்றும் மேஜிக் கீபோர்டு உள்ளிட்டவை அடங்கும்.

மேக் சாதனங்களை பொருத்தவரை 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடல்கள் அதிநவீன M3 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இந்த சாதனங்கள் அனைத்தும் சர்வதேச சந்தையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றை மிக விரைவில் அறிவிக்க ஆப்பிள் விளம்பர குழுக்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News