மொபைல்ஸ்

நுபியாவின் முதல் ஃப்ளிப் போன் அறிமுகம் - என்ன பிராசஸர், என்ன விலை?

Published On 2024-02-27 12:01 GMT   |   Update On 2024-02-27 12:01 GMT
  • நுபியாவின் முதல் ஃப்ளிப் போன் 4310 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டுள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் 33 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

நுபியா நிறுவனத்தின் முதல் ஃப்ளிப் போன் 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நுபியா ஃப்ளிப் 5ஜி மாடலில் 6.9 இன்ச் 120Hz OLED டிஸ்ப்ளே, வெளிப்புறம் 1.43 இன்ச் அளவில் OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஃப்ளிப் போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் கொண்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4310 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு இந்த ஸ்மார்ட்போனை 73 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.

 


நுபியா ஃப்ளிப் 5ஜி அம்சங்கள்:

6.9 இன்ச் 2790x1188 பிக்சல் FHD+ 120Hz AMOLED மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே

1.43 இன்ச் 466x466 பிக்சல் AMOLED வெளிப்புற டிஸ்ப்ளே

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர்

அட்ரினோ 644 GPU

6 ஜி.பி. ரேம்

128 ஜி.பி. மெமரி

ஆண்ட்ராய்டு 13

டூயல் சிம் ஸ்லாட்

50MP பிரைமரி கேமரா

2MP டெப்த் சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்

16MP செல்ஃபி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3

யு.எஸ்.பி. டைப் சி

4310 எம்.ஏ.ஹெச். பேட்டரி

33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

நுபியா ஃப்ளிப் 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 49 ஆயிரத்து 650 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கும் என நுபியா தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News