கணினி

ஸ்மார்ட் ஹோம் பிரிவில் புதிய சாதனம் உருவாக்கும் ஆப்பிள்

Published On 2023-07-04 04:00 GMT   |   Update On 2023-07-04 04:00 GMT
  • ஐஒஎஸ் 17-இல் உள்ள ஸ்டான்ட்பை அம்சத்திற்காக தனியே ஹார்டுவேர் சாதனம் உருவாக்கப்பட்டு இருக்கலம்.
  • புதிய டிஸ்ப்ளே லோ-பவர் மோடில் ஸ்மார்ட் ஹோம் சாதனமாக பயன்படும்.

ஆப்பிள் நிறுவனம் புதிதாக எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளே ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேக் கம்ப்யுட்டர்களுக்காக உருவாக்கப்பட்டு வரும் புதிய டிஸ்ப்ளே, லோ-பவர் மோடில் ஸ்மார்ட் ஹோம் டிஸ்ப்ளே போன்றும் பயன்படுத்த முடியும் என்று ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் தெரிவித்து இருக்கிறார்.

ப்ரோ டிஸ்ப்ளே XDR மற்றும் ஆப்பிள் ஸ்டூடியோ டிஸ்ப்ளே மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன்களை உருவாக்கும் பணிகளிலும் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஸ்டூடியோ டிஸ்ப்ளே போன்றே புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே ஐஒஎஸ் சாதனத்திற்கான சிப் பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது.

 

மேலும் இது ஆப்பிள் ஏ13 சிப்-ஆக இருக்கும் என்று தெரிகிறது. ஸ்டூடியோ டிஸ்ப்ளேவின் மென்பொருள் திறன் கேமரா மற்றும் ஸ்பீக்கர் சிஸ்டம் சார்ந்த மேம்படுத்தல்களாகவே உள்ளன. புதிய டிஸ்ப்ளே லோ-பவர் மோடில் ஸ்மார்ட் ஹோம் சாதனமாக பயன்படும். சமீபத்திய ஐஒஎஸ் 17 வெர்ஷனில் ஸ்டான்ட்-பை எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது.

இது ஐபோனை கிடைமட்டமாக வைத்து சார்ஜ் செய்யும் போது ஃபுல் ஸ்கிரீன் மோடில் தகவல்களை ஒளிபரப்பும். இது ஸ்மார்ட் டிஸ்ப்ளே மென்பொருளுக்கான முன்னோட்டமாக இருக்கும். ஸ்டான்ட்-பை அம்சம் கொண்டு சற்று தொலைவில் இருந்தும் தகவல்களை படிக்க முடியும். இதனை நைட் ஸ்டான்டு, கவுன்ட்டர் மற்றும் மேசைகளில் வைத்து பயன்படுத்தலாம்.

இந்த மோடில் வைத்து, கடிகாரம், பிடித்தமான புகைப்படங்கள், விட்ஜெட்கள் உள்ளிட்டவைகளும், லைவ் ஆக்டிவிட்டி, சிரி, அழைப்புகள் மற்றும் பெரிய நோட்டிஃபிகேஷன் உள்ளிட்டவைகளுக்கான சப்போர்ட் வழங்கப்படுகிறது. ஐஒஎஸ் 17-இல் உள்ள ஸ்டான்ட்பை அம்சத்திற்காக தனியே ஒரு ஹார்டுவேர் சாதனம் உருவாக்கப்பட்டு இருக்கலம் என்றும் கூறப்படுகிறது. 

Tags:    

Similar News