கணினி

ஆப்பிள் விஷன் ப்ரோவில் இப்படி ஒரு வசதியா? இணையத்தில் லீக் ஆன தகவல்!

Published On 2023-06-23 02:20 GMT   |   Update On 2023-06-23 02:20 GMT
  • ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டில் உள்ள யாரும் அறிந்திராத அம்சம் பற்றிய தகவல் வெளியானது.
  • ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் விலை 3 ஆயிரத்து 499 டாலர்கள் ஆகும்.

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஸ்பேஷியல் கம்ப்யூட்டர் - ஆப்பிள் விஷன் ப்ரோ - கடந்த மாதம் நடைபெற்று முடிந்த சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு - WWDC 2023-இல் அறிமுகம் செய்தது. இந்த ஹெட்செட் விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தரவுகளை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

புதிய மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் குறித்து ஆப்பிள் நிறுவனம் பல்வேறு அம்சங்களை விளக்கி இருந்தது. இது பற்றிய அறிவிப்பு வெளியானதில் இருந்தே, இந்த ஹெட்செட்-க்கான வரவேற்பு அதிகரிக்க துவங்கி விட்டது. பலரும் இது எப்போது விற்பனைக்கு வரும் என்று காத்திருக்கின்றனர். இந்த நிலையில், ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டில் உள்ள யாரும் அறிந்திராத அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

 

இந்த அம்சத்தை தனியார் செய்தி நிறுவனமான 9டு5மேக் விஷன்ஒஎஸ் SDK-வில் இருந்து கண்டறிந்து இருக்கிறது. அதன்படி கெஸ்ட் மோட் எனும் அம்சம், ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட், மற்றொரு பயனர் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், அதனை பயன்படுத்த வழி செய்கிறது. விஷன் ப்ரோ ஹெட்செட் உரிமையாளர்கள் தங்களின் ஹெட்செட்-ஐ மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கவும், அனுமதியை நிராகரிக்கவும் முடியும்.

இந்த ஹெட்செட்-ஐ பயனர்கள் தாங்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள முடியும். இவ்வாறு செய்யும் போது, வேறு யாரும் இந்த ஹெட்செட்-ஐ பயன்படுத்த முடியாது. கெஸ்ட் பயனர்கள் குறிப்பிட்ட செயலிகள் அல்லது செட்டிங்களை ஆப்டிக் ஐடி இல்லாமல், பயன்படுத்த முடியாமல் செய்யும் வசதியும் விஷன் ப்ரோவில் வழங்கப்படுகிறது.

 

இது கெஸ்ட் பயனர்கள் தடுக்கப்பட்ட செயலிகளை, விஷன் ப்ரோ உரிமையாளரின் பயோமெட்ரிக் விவரங்கள் இன்றி பயன்படுத்த முடியாமல் செய்து விடும். ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் விலை 3 ஆயிரத்து 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 88 ஆயிரத்து 700 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இதன் விற்பனை அடுத்த ஆண்டு துவங்கும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News