இந்தியா

நீதித்துறைக்கு பதில் சொல்ல வேண்டும்: அமலாக்கத்துறையை கண்டித்த டெல்லி கோர்ட்

Published On 2024-05-01 08:01 GMT   |   Update On 2024-05-01 08:01 GMT
  • பீகார் தொழிலதிபர் அமித் கட்யால் நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
  • இந்த வழக்கு விசாரணையில் டெல்லி நீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

புதுடெல்லி:

பீகார் முன்னாள் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவின் நெருங்கிய கூட்டாளியான தொழிலதிபர் அமித் கட்யால் நில மோசடி தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

நில மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் அமித் கத்யால் இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே அமலாக்கத் துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத் துறையின் அடவாடித்தனமான செயல்பாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

அமலக்கத்துறை சட்ட விதிகளுக்கு கட்டுபட்டுதான் நடக்க வேண்டும்.

பி.எம்.எல்.ஏ சட்டப்பிரிவை பயன்படுத்தி சாமானியர்களை துன்புறுத்துவதை எந்த விதத்திலும் அமலாக்கத் துறை நியாப்படுத்த முடியாது.

நீதிமன்றத்திற்கும், சட்டத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை அமலாக்கத்துறைக்கு உள்ளது என காட்டமாக தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News