இந்தியா

அமேதியில் என்னுடைய வெற்றி காந்தி குடும்பத்தின் வெற்றியாக இருக்கும்- கே.எல். சர்மா

Published On 2024-05-09 09:37 GMT   |   Update On 2024-05-09 09:37 GMT
  • காங்கிரஸ் தலைவர் சதீஷ் சர்மா அமேதி தொகுதியில் 1990-ல் போட்டியிட்டார். பின்னர் சோனியா காந்திக்காக அமேதி தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறினார்.
  • அதே சூழ்நிலை ஏற்பட்டால் தானும் அமேதி தொகுதியில் இருந்து மாறுவேன் என கே.எல். சர்மா தெரிவித்துள்ளார்.

அமேதி தொகுதியில் கடந்த முறை ராகுல் காந்தி போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்தமுறை சோனியா காந்தி மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதிக்கு மாறியுள்ளார். அமேதி தொகுதில் காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான, விசுவாசமான கிஷோரி லால் சர்மா நிறுத்தப்பட்டுள்ளார்.

காந்தி குடும்பம் அமேதி தொகுதியில் போட்டியிடவில்லை என்ற முடிவின் மூலம் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது என பா.ஜனதாவின் கிண்டல் செய்தனர். மேலும் பயந்து ஓடிவிட்டார் என விமர்சனம் செய்திருந்தது.

இந்த நிலையில், பா.ஜனதாவின் ஆணவம் அடித்து நொறுக்கப்படும். அமேதி தொகுதியில் என்னுடைய வெற்றி, காந்தி குடும்பத்தின் வெற்றியாக இருக்கும் என கே.எல். சர்மா தெரிவித்துள்ளார்.

பிடிஐ நிறுவத்திற்கு பேட்டியளித்த அவர் அமேதி தொகுதி குறித்து கூறியதாவது:-

காங்கிரஸ் தலைவர் சதீஷ் சர்மா அமேதி தொகுதியில் 1990-ல் போட்டியிட்டார். பின்னர் சோனியா காந்திக்காக அமேதி தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறினார். அதே சூழ்நிலை ஏற்பட்டால் தானும் அமேதி தொகுதியில் இருந்து மாறுவேன் என கே.எல். சர்மா தெரிவித்துள்ளார்.

சதீஷ் சர்மா 1991 மற்றும் 1996-ல் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1998-ல் தோல்வியடைந்த நிலையில், ராகுல் காந்திக்காக ரேபரேலி தொகுதிக்கு மாறினார். சோனியா காந்தி 1999-ல் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சரண் அடைந்து விட்டதாக பா.ஜனதா கூறுவது அவர்களின் ஆணவத்தை காட்டுகிறது. அதற்கு மே 20-ந்தேதி மக்கள் பதில் அளிப்பார்கள். முடிவு ஜூன் 4-ந்தேதி தெரியவரும்.

ஆங்கிலேயர்களின் காலத்தில் காந்தி குடும்பத்தினர் ஓடிப்போனதில்லை, இப்போதும் ஓடிப்போனதில்லை, எதிர்காலத்திலும் அப்படி ஓடிப்போக மாட்டார்கள். மற்றவர்களை ஓட வைப்போம். ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜக ஓடுவதை உறுதி செய்து வருகிறார்.

இவ்வாறு கிஷோரி லால் சர்மா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News