சமையல்

உடல் சூட்டை தணிக்கும் பானகம்

Published On 2024-05-08 06:17 GMT   |   Update On 2024-05-08 06:17 GMT
  • பானகம் உடலின் களைப்பை நீக்கி, புதுத்தெம்பை ஏற்படுத்தும்.
  • வெல்லத்தை தூளாக்கி தண்ணீரை ஊற்றி கரைக்கவும்.

பானகம் என்பது இனிப்பு, புளிப்பு சுவை கலந்த பானம். கோடை காலத்தில் இந்த பானகம், உடலின் களைப்பை நீக்கி, புதுத்தெம்பை ஏற்படுத்தும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து கோடை வெயிலில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்கும் பானகம் தயாரிக்கும் முறையை விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை பழம் - 1

வெல்லம் - தேவையான அளவு

சுக்கு - சிறிதளவு

ஏலக்காய் - சிறிதளவு

பச்சை கற்பூரம் - சிறிதளவு

செய்முறை:

* வெல்லத்தை தூளாக்கி தண்ணீரை ஊற்றி கரைக்கவும். கரைந்த பின் தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும்.

* அதனுடன் சுக்குப்பொடி, ஏலக்காய் தூளை சேர்க்கவும். கலந்து விட்டு பச்சை கற்பூரம் சிறிதளவு சேர்க்கவும்.

* பின்னர் அதனுடன் எலுமிச்சை பழச்சாறை கொட்டையை இல்லாமல் சேர்த்து நன்கு கலக்கினால் பானகம் தயார்.

Tags:    

Similar News