சமையல்

கோடை வெயிலுக்கு இதமளிக்கும் மாம்பழ லஸ்ஸி

Published On 2024-05-14 10:08 GMT   |   Update On 2024-05-14 10:08 GMT
  • உடல் சோர்வடையாமல் வைத்திருக்க உதவி செய்யும்.
  • மாம்பழ சீசனுக்கு ஏற்ற மாம்பழ லஸ்ஸி சுவைத்து பாருங்கள்.

வெயில் காலம் வந்தாலே உடல் சூட்டைக் குறைக்கவும், உடலை சோர்வடையாமல் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இளநீர், மோர், பதநீர், நீர் ஆகாரம் போன்றவற்றைத் தான் அதிகளவில் சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். இத்தகைய உணவுகள் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு தற்போது சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நம்மைப் பாதுகாக்க உதவியாக இருக்கும்.

அதுவும் இந்த மாம்பழ சீசனில் மாம்பழ லஸ்ஸி டிரை பண்ணலனா எப்படி. வாங்க மாம்பழ லஸ்ஸி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மாம்பழம் - 1 கப் (நறுக்கியது)

சர்க்கரை - 1/2 கப்

தயிர் - 1/2 கப்

ஏலக்காய் - 2

ஐஸ் கியூப் - 8-9

புதினா இலைகள் - 4-5 (அழகுபடுத்த)

பாதாம் - அழகுபடுத்துவதற்கு

முந்திரி - அழகுபடுத்துவதற்கு

பிஸ்தா - அழகுபடுத்த

செய்முறை:

மாம்பழத்தை தயாரிக்க, 1 முதல் 2 பழுத்த மாம்பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். அதன்பிறகு 1/2 கப் தயிர், மாம்பழ துண்டுகள், 1/2 கப் சர்க்கரை மற்றும் 8 அல்லது 9 ஐஸ் கியூப்ஸ், 2 ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பேஸ்ட் மாதிரி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் இதனை ஒரு பவுளில் போட்டு ஃப்ரிட்ஜில் ஒரு மணிநேரம் வைத்து எடுத்து புதினா இலைகள், பாதாம், பிஸ்தா அல்லது முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம். 

 

Tags:    

Similar News