சமையல்

சுவையான அத்திக்காய் சாம்பார்

Published On 2024-02-20 10:30 GMT   |   Update On 2024-02-20 10:30 GMT
  • இளம் காயாக இருக்கும் அத்தியை பறித்து ருசியாக சமைக்க முடியும்.
  • கிராமப்புறங்களிலும் மலைவாசஸ்தலங்களிலும் அதிகமாக வளரும்.

தேவையான பொருள்கள்:

பாசிப்பருப்பு - தேவையான அளவு

அத்திக்காய் - கால் கிலோ

பெரிய வெங்காயம் நறுக்கியது - 2

மஞ்சள் தூள் - சிறிதளவு

தக்காளி - 2

பூண்டு - 2 பல்

உப்பு - சுவைக்கு ஏற்ப

சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - தாளிக்க

கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை

அத்திக்காயை மஞ்சள் தூள் போட்டு நீரில் கழுவி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பாசிப்பருப்பை குக்கரில் இரண்டு விசில் விட்டு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பாதி வெந்திருக்கும் பாசிப் பருப்புடன் அத்திக்காய் மற்றும் உங்களுக்கு விருப்பமான சாம்பார் காய்கள் போட்டு ஒரு விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கி வைத்த வெங்காயம், பூண்டு, தக்காளி, போன்றவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.

நன்றாக வதங்கிய பின் வேகவைத்து எடுத்து வைத்த பருப்பு மற்றும் காய்கறிகளைச் சேர்த்து கூடவே தேவையான அளவு உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு உளுந்து தாளித்து, கூடவே கறிவேப்பிலை சேர்த்து, அடுப்பை அணைத்த பின் பெருங்காயம் ஒரு பின்ச் சேர்த்து இறக்கி சாம்பாரில் சேர்க்கவும். அவ்வளவுதான்... அத்திக்காய் சாம்பார் தயார்.

Tags:    

Similar News