உடற்பயிற்சி

உடல் உஷ்ணத்தை தணிக்கும் மூச்சுப்பயிற்சி...

Published On 2024-05-05 09:53 GMT   |   Update On 2024-05-05 09:53 GMT
  • வெப்பத்தை விரட்டி அடிக்க இயற்கை வழிமுறைகளில் ஒன்றான மூச்சுப்பயிற்சியை பின்பற்றலாம்.
  • தொண்டை பகுதியில் குளிர்ச்சியை உணரலாம். உடலும் அதிக உஷ்ணத்திற்கு உள்ளாகாது.

இந்த ஆண்டு கோடை காலத்தில் வழக்கத்தை விட வெயில் சுட்டெரிக்க தொடங்கிய நிலையில் அக்னி நட்சத்திரமும் சேர்ந்து தனது பங்குக்கு உக்கிரம் காட்டத்தொடங்கி இருக்கிறது. வெப்ப அலையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.

இதனால் ஏற்படும் உடல் உஷ்ணத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள பலரும் பல்வேறு வழிமுறைகளை கையாள்கிறார்கள். வெப்பத்திடம் இருந்து உடலை தற்காத்து குளிர்ச்சி தன்மை நிலவச்செய்ய ஏ.சி. அறையில் நிறைய பேர் நேரத்தை செலவிடுவார்கள். ஏர்கூலரையும் பயன்படுத்துவார்கள். வெப்பத்தை விரட்டி அடிக்க இயற்கை வழிமுறைகளில் ஒன்றான மூச்சுப்பயிற்சியை பின்பற்றலாம்.

நாடி சோதன பிரணாயாமம், சிதாலி பிரணாயாமம் உள்ளிட்ட மூச்சுப் பயிற்சிகள் உடலுக்கு குளிர்ச்சி சூழலை தரும் தன்மை கொண்டவை. இதில் சிதாலி பிரணாயாமம் எளிமையானது. நாக்கின் பக்கவாட்டு பகுதிகளை லேசாக மடக்கிக்கொள்ள வேண்டும்.


வெப்பத்தை விரட்டும் மூச்சுப்பயிற்சி...பின்பு நாக்கின் வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து சுவாசிக்க வேண்டும். வாய் வழியாக சுவாசக்காற்று தொண்டை பகுதியை அடையும்போது குளிர்ச்சி தன்மையை உணரலாம்.

அதன்பிறகு நாக்கு வழியாக நன்றாக மூச்சை இழுத்து உதட்டை மூடிவிட்டு மூக்கு வழியாக சுவாசத்தை வெளியேற்ற வேண்டும். தொடர்ந்து ஐந்தாறு முறை இவ்வாறு செய்து வரலாம்.

நாக்கை மடக்கி மூச்சை உள் இழுக்க முடியாதவர்கள் வாயை லேசாக திறந்து கொண்டு பற்களின் வழியாக மூச்சுக்காற்றை உள் இழுக்கலாம். பின்னர் மூக்கு வழியாக சுவாசக்காற்றை வெளியேற்றலாம்.

இவ்வாறு செய்யும்போது வாய், தொண்டை பகுதியில் குளிர்ச்சியை உணரலாம். உடலும் அதிக உஷ்ணத்திற்கு உள்ளாகாது.

Tags:    

Similar News