தோஷ பரிகாரங்கள்
null

ஒரே இராசியில் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கலாமா?

Published On 2024-05-03 08:30 GMT   |   Update On 2024-05-04 10:09 GMT
  • 10-பொருத்தங்களும், ஜாதக-கிரக நிலையை கொண்டு கிரக-தோஷங்களும் பார்த்து விவாகம் முடிவு செய்யப்படுகின்றது.
  • ஒரே இராசியில் மற்றும் நட்சத்திரத்தில் உள்ள இருவரை சேர்த்து வைக்காமல் தவிர்ப்பது நல்லது.

திருமணப் பொருத்தம் என்பது கணவன் மனைவியாக இணையும் இருவருக்கும் நிலையான மன ஒற்றுமை, மகிழ்ச்சி, இன்பமான தாம்பத்திய உறவு, பிள்ளைப் பேறு, சுபிட்சமான எதிர்காலம் என்பன அமையுமா? என இருவருடைய ஜாதகங்களில் உள்ள கிரகங்களின் ஆதிக்கத்தைக் (நிலைகளைக்) கொண்டு கணித்து அறிதல்.

திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது மணமகன், மணமகள் ஆகிய இருவருடைய ஜாதகங்களிலும், பிறந்த நட்சத்திரங்களை வைத்து 10-பொருத்தங்களும், ஜாதக-கிரக நிலையை கொண்டு கிரக-தோஷங்களும் பார்த்து விவாகம் முடிவு செய்யப்படுகின்றது.

ஒரே இராசியில் திருமணம் செய்யலாமா?

திருமணப் பொருத்தத்தில் மிகவும் முக்கியமானது நட்சத்திரப் பொருத்தம் ஆகும். நட்சத்திரப் பொருத்தங்கள் 10க்கும் மேற்பட்ட பொருத்தங்கள் இருந்தாலும், ஆண், பெண் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்தால் முக்கியமான பொருத்தமான மாங்கல்ய பொருத்தம் இருக்காது.


தம்பதிகள் வெவ்வேறு இராசிகளாகவும் வெவ்வேறு நட்சத்திரங்களாகவும் இருப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் ஒரே இராசியாக இருக்கும்பட்சத்தில் கிரக நிலைகள் சரியில்லாத போது இருவருக்கும் ஒரே மாதிரியான கிரக நிலைகள் அமையும். ஏழரை சனி, அஷ்டம சனி போன்றவை இருவருக்கும் ஒரே சமயத்தில் வரும் போது அவர்களிடையே கருத்து வேறுபாடுகளும் வர வாய்ப்புகள் உண்டு.

ஒரே இராசியாக இருக்கும் சமயத்தில் பெண்ணுக்கு பிந்தைய நட்சத்திரமாக ஆணுக்கு இருந்தால் நன்மை. ஆனால் ஒரே இராசியாக இருந்தால் தம்பதிகளின் ரசனை ஒரே மாதிரியாக இருக்கும். எனினும் மோசமான கிரகநிலைகளின் போது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

எனவே, ஒரே இராசியில் மற்றும் நட்சத்திரத்தில் உள்ள இருவரை சேர்த்து வைக்காமல் தவிர்ப்பது நல்லது. ஒரே இராசியாக இருந்தாலும் வேறு வேறு நட்சத்திரம் உடையவரர்களாக இருப்பது ஓரளவு பிரச்சனையை குறைக்கும்.

Tags:    

Similar News