கிரிக்கெட்

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

Published On 2024-05-04 14:56 GMT   |   Update On 2024-05-04 14:56 GMT
  • வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் பிஎஸ்எல் நடத்தப்படும்.
  • அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் டிராபி நடைபெற இருக்கிறது.

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) என்ற பெயரில் டி20 தொடரை நடத்துகிறது.

வழக்கமாக பிப்ரவரி மாதம் இந்த டி20 லீக் தொடரை பாகிஸ்தான் நடத்தும். இதுவரை 9 முறை லீக் தொடரை நடத்தியுள்ளது.

அடுத்த வருடம் 10-வது டி20 லீக் தொடர் நடத்தப்பட இருக்கிறது. அதேவேளையில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது.

இதனால் அடுத்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்றுள்ள அணி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளது. அப்போது மே மாதம் நடத்த சம்பவம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மார்ச் மாதம் முதல் மே மாதம் கடைசி வாரம் வரை ஐபிஎல் தொடர் நடைபெறும். இதனால் அடுத்த வருடம் ஐபிஎல் போட்டியில் நடைபெறும்போது பிஎஸ்எல் போட்டியிடும் நடைபெறும் நிலையில் உள்ளது.

தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸின் பெரும்பாலான வீரர்கள் இரண்டு லீக் தொடரிலும் விளையாடி வருகிறார்கள். இதனால் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே மாதத்தை தவறவிட்டால் ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை பாகிஸ்தான் அணிக்கு தொடர்ந்து சர்வதேச போட்டிகள் இருக்கிறது. இதனால் மே மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News