கிரிக்கெட்
null

4 மணி நேரம் வருண பகவான் வழிவிடுவாரா?- போட்டிக்கு தயாராகும் சிஎஸ்கே- ஆர்சிபி

Published On 2024-05-18 09:59 GMT   |   Update On 2024-05-18 10:16 GMT
  • மழையால் போட்டி ரத்தானால் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
  • ஆர்சிபி வெற்றி பெற்றால் ரன்ரேட்டில் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை பெறும்.

இந்தியாவின் அனைத்து இடங்களிலும் கடுமையான கோடை வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தென்இந்தியாவின் பல இடங்களில மழை பெய்து வருகிறது. கோடை மழை மக்களை குளிர்வித்து வருகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் மழை பெய்து வருகிறது.

தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஒருபக்கம் மழை குளிர்வித்து வரும் நிலையில், மறுபக்கம் கிரிக்கெட் ரசிகர்கள் போட்டிகள் பாதிக்கப்படுமோ என கவலைப்படுகின்றனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஏற்கனவே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

4-வது அணியாக முன்னேறுவதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஆர்சிபி அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த இரண்டு அணிகளும் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆனால் பெங்களூருவில் மழை அச்சுறுத்தி வருகிறது. ஒருவேளை இன்று மழை பெய்து ஆட்டம் கைவிடப்பட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். ஆர்சிபி வெளியேறிவிடும்.

மழை பெய்தால் ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய ஆபத்து. ஒருவேளை நன்றாக மழை பெய்து ஓய்ந்து விட்டால் உடனடியாக மழைநீரை மைதானத்தில் இருந்து வெளியேற்றி போட்டியை நடத்தி விடுவோம் என மைதான பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அது எப்படி நடக்கும் என்பதற்கான விளக்க வீடியோவையும் வெளியிட்டனர்.

ஆனால், தொடர்ந்து மழை பெய்தால் ஏதும் செய்ய முடியாது. இதனால் இன்று இரவு 7.30 மணி முதல் 11.30 மணி வரை சுமார் 4 மணி நேரம் மழை பெய்யவில்லை என்றால் போட்டி நடத்தப்பட்டு விடும்.

ஆனால் மாலை வரை பெங்களூருவில் மழை பெய்ய வாய்ப்பில்லை. இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெதர்மேன் தெரிவித்துள்ளனர்.

வருண பகவான் வழிவிட்டால் போட்டியும் பரபரப்பாக இருக்கும். ரசிகர்களும் உற்சாகம் அடைவார்கள். ஒட்டுமொத்தமாக இன்று மழையை பொறுத்து சிஎஸ்கே- ஆர்சிபி-யின் பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பு இறுதி செய்யப்படும்.

Tags:    

Similar News