இது புதுசு

இந்திய வெளியீட்டுக்கு தயாராகும் மாருதியின் 7 சீட்டர் கார்கள்

Published On 2024-01-25 09:54 GMT   |   Update On 2024-01-25 09:54 GMT
  • எம்.பி.வி. மாடல்கள் வரும் ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படலாம்.
  • மாருதி சுசுகி YDB காம்பேக்ட் எம்.பி.வி. மாடல் ஆகும்.

மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் தயர்போது எர்டிகா மற்றும் XL6 என இரண்டு எம்.பி.வி. கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில் XL6 மாடல் ஆறு பேர் பயணம் செய்யக்கூடிய எம்.பி.வி. மாடல் ஆகும்.

7 சீட்டர் மாடல்கள் எண்ணிக்கையை விரிவுப்படுத்தும் வகையில், மாருதி சுசுகி நிறுவனம் இரண்டு புதிய மாடல்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. புதிய எம்.பி.வி. மாடல்கள் வரும் ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

 


இரண்டு கார்களில் ஒன்று மாருதி சுசுகி YDB காம்பேக்ட் எம்.பி.வி. மாடல் ஆகும். இது எர்டிகா மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. இந்த கார் தற்போது சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் சுசுகி ஸ்பேசியா மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது. இந்த கார் அளவில் 4 மீட்டர் நீளமாகவும், சற்றே வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதுதவிர காரின் ஒட்டுமொத்த தோற்றம் சதுரங்க வடிவம் கொண்டிருக்கும். புதிய YDB காம்பேக்ட் எம்.பி.வி. மாடல் ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. இந்த கார் நெக்சா பிரான்டிங்கில் விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதில் 1.2 லிட்டர் Z சீரிஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது.

 


கிரான்ட் விட்டாரா சார்ந்த 7 சீட்டர் எம்.பி.வி. மாடலை மாருதி சுசுகி உருவாக்கி வருகிறது. இந்த கார் Y17 எனும் பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த கார் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம். இது சுசுகியின் குளோபல் சி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இதே பிளாட்ஃபார்மில் தான் கிரான்ட் விட்டாரா மாடலும் உருவாக்கப்பட்டது. 

Tags:    

Similar News