இது புதுசு

ஏகப்பட்ட மாற்றங்கள், ADAS வசதியுடன் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா சொனெட்

Published On 2023-12-14 08:02 GMT   |   Update On 2023-12-14 08:02 GMT
  • ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா சொனெட் மாடல் ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
  • புதிய சொனெட் மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.

2024 கியா சொனெட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கியா சொனெட் மாடல் முதல் முறையாக மிகப் பெரிய அப்டேட் பெற்று இருக்கிறது. புதிய சொனெட் மாடலுக்கான முன்பதிவுகள் டிசம்பர் 20-ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா சொனெட் மாடல் HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+, மற்றும் X-Line என ஏழு வேரியண்ட்கள், 11 வெளிப்புற நிறங்களில் கிடைக்கிறது. இதன் மோனோடோன் வெர்ஷன் கிளேசியர் வைட் பியல், ஸ்பார்க்லிங் சில்வர், கிராவிட்டி கிரே, அரோரா பிளாக் பியல், இன்டென்ஸ் ரெட், இம்பீரியல் புளூ, க்ளியர் வைட், பீவ்டெர் ஆலிவ் மற்றும் மேட் கிராஃபைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

 


டூயல் டோன் ஆப்ஷன்களில் இன்டென்ஸ் ரெட் மற்றும் கிளேசியர் வைட் நிறங்கள் பிளாக் ரூஃப் உடன் வழங்கப்படுகிறது. 2024 கியா சொனெட் மாடலின் முன்புறம் மாற்றப்பட்டு இன்வெர்ட் செய்யப்பட்ட "L" வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் முற்றிலும் புதிய டிசைன் கொண்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், புதிய எல்.இ.டி. ஃபாக் லேம்ப்கள், பின்புறத்தில் லைட் பார் டெயில்கேட் முழுக்க நீளும் வகையில் வழங்கப்பட்டு இருக்கிறது.

கேபின் பகுதியில் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.25 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், லெவல் 1 ADAS சூட், புதிய ஏ.சி. பேனல், ஜன்னல்களில் வாய்ஸ் கண்ட்ரோல் வசதி, முன்புற இருக்கைகளில் வென்டிலேஷன் வசதி வழங்கப்படுகிறது.

 


புதிய 2024 கியா சொனெட் மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் மாற்றம் செய்யப்படாமல், அதே என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த மாடலிலும் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 82 ஹெச்.பி. பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

1.5 லிட்டர் டீசல் யூனிட் 114 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டர்போ பெட்ரோல் என்ஜின் 118 ஹெச்.பி. பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு iMT, 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் மற்றும் 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News