இது புதுசு

வேற லெவல் அப்கிரேடுகள், கனெக்டெட் அம்சங்கள் - 2024 கிரெட்டா அறிமுகம்

Published On 2024-01-10 10:06 GMT   |   Update On 2024-01-10 10:06 GMT
  • இந்த கார் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.
  • வெளிப்புறம் மாற்றப்பட்டு, புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் உள்ளது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது அதிகம் எதிர்பாக்கப்பட்ட கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த கார் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது இந்த கார் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.

2024 ஹூண்டாய் கிரெட்டா மாடலின் முன்புறம் முழுமையாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதில் முற்றிலும் புதிய கிரில், ரிவைஸ்டு எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், மேம்பட்ட பம்ப்பர், ஸ்கிட் பிலேட், புதிய பொனெட் மற்றும் அதிக கவர்ச்சிகர எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள் வழங்கப்பட்டுள்ளன.

 


இதன் வெளிப்புறம் மாற்றப்பட்டு, புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள், பின்புறத்தில் கனெக்டெட் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் பின்புற பம்ப்பரில் புதிய டெயில்கேட் வழங்கப்பட்டுள்ளது. புதிய காரின் கேபின் மாற்றப்பட்டு அதிக பிரீமியம் தோற்றம் கொண்டிருக்கிறது. இதில் புதிய டேஷ்போர்டு, சென்டர் கன்சோல், ஏ.சி. வென்ட் உள்ளது.

இத்துடன் 10.25 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 10.25 இன்ச் அளவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. அம்சங்களை பொருத்தவரை 6 ஏர்பேக், 70-க்கும் அதிக கனெக்டெட் தொழில்நுட்பங்கள், 19 அம்சங்கள் கொண்ட லெவல் 2 ADAS, ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News