கார்

விரைவில் இந்தியா வரும் புதிய கார் மாடல்கள்

Published On 2024-01-23 13:09 GMT   |   Update On 2024-01-23 13:09 GMT
  • காஸ்மடிக் அப்டேட்கள் மற்றும் கேபின் பகுதிகளில் மாற்றங்கள் செய்யப்படலாம்.
  • மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

இந்திய சந்தையில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களின் புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நான்கு புதிய கார் மாடல்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

 


மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட்:

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மஹிந்திரா XUV300 மாடல் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களுக்குள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் காஸ்மடிக் அப்டேட்கள் மற்றும் கேபின் பகுதிகளில் மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின், இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

 


டாடா கர்வ்:

டாடா நிறுவனம் தனது கர்வ் ப்ரோடக்ஷன் வெர்ஷனை வரும் மாதங்களில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகமாகும் என தெரிகிறது. இந்த கார் சிங்கில் மற்றும் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் உடன் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது.

 


புதிய தலைமுறை மாருதி சுசுகி ஸ்விஃப்ட்:

மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடல் நீண்ட காலமாக டெஸ்டிங் செய்யப்படும் நிலையில், வரும் மாதங்களில் இந்த கார் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். முன்னதாக டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி நிகழ்வில் கான்செப்ட் வடிவில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் இன்டீரியர் அப்டேட் செய்யப்பட்டு, மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜினுடன் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

 


டொயோட்டா அர்பன் குரூயிசர் டைசர்:

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃபிரான்க்ஸ் மாடல் தான் டொயோட்டா பிரான்டிங்கில் அர்பன் குரூயிசர் டைசர் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எஸ்.யு.வி. கூப் மாடல் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்றும் இதில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களாக வழங்கப்படும் என தெரிகிறது.

Tags:    

Similar News