ஆட்டோ டிப்ஸ்

வாகன உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டி அசத்திய டாடா நெக்சான்

Published On 2023-04-11 14:46 GMT   |   Update On 2023-04-11 14:46 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியதாக அறிவித்துள்ளது.
  • நெக்சான் மாடல் அறிமுகமான ஏழே மாதங்களில் உற்பத்தியில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்து அசத்தியது.

டாடா மோட்டார்ஸ் நிறுவன உற்பத்தி ஆலையில் இருந்து நெக்சான் மாடலின் 5 லட்சமாவது யூனிட் வெளியிடப்பட்டது. பூனேவில் உள்ள உற்பத்தி ஆலையில் இருந்து டாடா நெக்சான் 5 லட்சமாவது யூனிட் வெளியானது. 2014 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் கான்செப்ட் கார் வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட நெக்சான் மாடல் 2017 வாக்கில் விற்பனைக்கு வந்தது.

விற்பனைக்கு வந்ததில் இருந்தே நெக்சான் மாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 80 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 35 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

அம்சங்களை பொருத்தவரை டாடா நெக்சான் மாடலில் 7 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஏர் பியூரிஃபையர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

டாடா நெக்சான் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 118 ஹெச்பி பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 ஹெச்பி பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

டிரான்ஸமிஷனுக்கு 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ஆப்ஷனாக ஏஎம்டி யூனிட் வழங்கப்படுகிறது. புதிய நெக்சான் மாடலில் தற்போது பிஎஸ்6 2 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் டாடா நெக்சான் மாடல் மாருதி சுசுகி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV400, கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, ரெனால்ட் கைகர் மற்றும் நிசான் மேக்னைட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

Tags:    

Similar News