ஆன்மிக களஞ்சியம்

இந்திரர் குபேரரர் தேவர்கள் வந்து வழிபட்ட குரு ஸ்தலம்

Published On 2024-04-30 11:45 GMT   |   Update On 2024-04-30 11:45 GMT
  • குரு தோஷம் நீங்க இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது.
  • இந்திரன், குபேரன் முதலியோரும் இங்கு வந்து வழி பட்டுள்ளனர்.

இத்தலம் கீழ்வேளூரிலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ளது.

நாகப் பட்டினம் மற்றும் திருவாரூரிலிருந்து செல்லலாம்.

வனவாசத்தின் போது பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்து இறைவனைப் பூஜித்ததாக வரலாறு சொல்கிறது.

தேவ குருவாகிய பிரகஸ்பதி சிறப்பான வழிபாடுகள் செய்து அருள் பெற்ற சிறந்த ஊர் இது.

இந்திரன், குபேரன் முதலியோரும் இங்கு வந்து வழி பட்டுள்ளனர்.

வியாழ பகவான் (குரு) இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றதால் இங்குள்ள தெட்சிணாமூர்த்தி பாதத்தில் முயலகன் இல்லை.

வியாழபகவானுக்கு குரு பட்டத்தை சிவபெருமான் வழங்கியதால், இங்குள்ள தெட்சிணாமூர்த்தி "தேவகுரு' என அழைக்கப்படுகிறார்.

குரு தோஷம் நீங்க இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது.

திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் ஜென்ம ஜாதகத்தை வைத்து அனுக்கிரக தட்சணாமூர்த்தியை வழிபட திருமணம் உடனே கைகூடும் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News